ஆவின் பால் அதிக விலைக்கு விற்கபட்டால்,கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆவின் பால் அதிக விலைக்கு விற்கபட்டால்,கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, டிசம்பர் 06,2015,

சென்னை,
ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலோ, ஆவின் பால் விநியோகம் தடைபட்டாலோ பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையினால் சென்னை மாநகரில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி, ஆவின் பால் தங்குதடையின்றி கிடைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பால் பவுடர் தொடர்ந்து தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

           சென்னை மாநகரில் மட்டும் நேற்று (5.12.2015) 75 டன் அளவிற்கும், இன்று (6.12.2015) 55 டன் அளவிற்கும், ஆக மொத்தம் 130 டன் அளவிற்கான பால் பவுடர் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆக மொத்தம், இன்று வரை (6.12.2015) சென்னை, கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 453 டன் பால் பவுடர் வழங்கப்பட்டுள்ளது.

                              தற்போது ஆவின் நிர்வாகத்தால் அரை லிட்டர் Toned Milk (நீல நிற பாக்கெட்) மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு 17 ரூபாய்க்கும், சில்லறை விற்பனைக்கு 18 ரூபாய் 50 பைசாவிற்கும், Standardized milk (பச்சை நிற பாக்கெட்) அரை லிட்டர் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு 19 ரூபாய் 50 பைசாவிற்கும், சில்லறை விற்பனைக்கு 20 ரூபாய் 50 பைசாவிற்கும், Full cream Milk (ஆரஞ்சு நிற பாக்கெட்) அரை லிட்டர் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு 21 ரூபாய் 50 பைசாவிற்கும், சில்லறை விற்பனைக்கு 22 ரூபாய் 50 பைசாவிற்கும், Double Toned Milk (மெஜந்தா நிற பாக்கெட்) அரை லிட்டர் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு 16 ரூபாய் 50 பைசாவிற்கும், சில்லறை விற்பனைக்கு 17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேற்காணும் விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டாலோ, அல்லது தங்கள் பகுதிகளில் பால் விநியோகம் தடைபட்டாலோ, பொதுமக்கள் இது தொடர்பாக 9840387510, 9840907494, 9443944908 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பால் விநியோகம் தொய்வின்றி தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்யப்படும்.என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்கண்ட  எண்களிலும், பொதுமக்கள் ஆவின் பால் மற்றும் பால் பவுடர் விநியோகம் குறித்து தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். 9449975518, 9841762577, 9840335202, 9444854300, 9443093126, 9445001109, 9444732720, 9840363896, 9445001110, 9840120004, 9884001987, 9445001108, 9445127272, 9445195912, 9445001112” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.