இன்று பிரதமர் மோடி பிறந்தநாள் ; முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

இன்று பிரதமர் மோடி பிறந்தநாள் ; முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஞாயிறு , செப்டம்பர் 18,2016,

சென்னை, பிரதமர் மோடியின் 66-வது பிறந்தநாளையொட்டி  முதல்வர் ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் 66-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா, மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக்கடிதத்தில், ‘‘மகிழ்ச்சிகரமான உங்களுடைய இன்றைய பிறந்தநாளில் இனிவரும் ஆண்டுகள், அற்புதமாக அமைய என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டுக்கும், மக்களுக்கும் அரும்பணியாற்ற பல்லாண்டு வல்லமையும், நல்ல ஆரோக்கியமும் தர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்’ ’என்று முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.