இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாள் : தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாள் : தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

வெள்ளி, ஜூலை 08,2016,

இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது மணிமண்டபத்தில், நேற்று தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனுக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில், மணிமண்டபம் அமைந்துள்ளது. அவரது பிறந்தநாளையொட்டி, மணிமண்டபம் மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலில் வைக்கப்பட்டிருந்த இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் திரு. D. ஜெயகுமார், திரு. கடம்பூர் ராஜூ, திரு. பெஞ்ஜமின், திருமதி. V.M. ராஜலட்சுமி, சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை துரைசாமி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இரட்டைமலை சீனிவாசனுக்கு மரியாதை செலுத்தினர்.

முதலமைச்சருக்கு பாராட்டு

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் அமைத்தும், அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டும் முதலமைச்சர் ஜெயலலிதா பெருமை சேர்த்திருப்பதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை காந்திமண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத்தில் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைசெலுத்தினர். இந்திய குடியரசு கட்சியின் தமிழக தலைவர் திரு.செ.கு.தமிழரசன், தனது குடும்பத்தினருடன் வருகை தந்து இரட்டை மலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.