ஈரோடு மாவட்டத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுவரும் மழைநீர் சேகரிப்பு திட்டம் – விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதால், முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

ஈரோடு மாவட்டத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுவரும் மழைநீர் சேகரிப்பு திட்டம் – விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதால், முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

மழைநீர் சேகரிப்பு திட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இதன்மூலம், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதால், முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், விவசாய நிலங்களில், தேவையான அளவுக்கு நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதால், குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியசடையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பயனடைந்து வரும் விவசாயிகளும், பொதுமக்களும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.