உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலம்: வேளாண்மை துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு பேச்சு

உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலம்: வேளாண்மை துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு பேச்சு

வெள்ளி, ஆகஸ்ட் 26,2016,

உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என்றார் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு விவசாய இடுபொருள் விற்பனையாளர்கள் சங்க மாநில மாநாட்டில் அவர் மேலும் பேசியது:

“இருமடங்கு உற்பத்தி; மூன்று மடங்கு லாபம்’ என்ற அடிப்படையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வேளாண்மைத் துறையில் பொற்காலத்தை ஏற்படுத்தி வருகிறார்.

உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. வேளாண்மைத் துறைக்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருவதே இதற்குக் காரணம்.

உணவு உற்பத்தி திறனை அதிகப்படுத்த வேண்டுமானால், விவசாய இடுபொருள் விற்பனையாளர்களின் ஒத்துழைப்புத் தேவை. எனவே, தமிழக முதல்வருக்கு விவசாய இடுபொருள் விற்பனையாளர்கள் துணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

சம்பா சாகுபடி தொகுப்புத் திட்டத்தில் இடுபொருள்களுக்காக ரூ. 64.30 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். இதேபோல, விவசாயிகளின் கூட்டுறவு கடனைத் தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், புதிய கடன் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா என தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே. ராமசாமி, சதய விழாக் குழுத் தலைவர் எம். ரெங்கசாமி, மேயர் சாவித்திரி கோபால், சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. விஜய் நடராஜ், மாநாட்டுக் குழுத் தலைவர் எம். மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.