உலக கோப்பை கபடி போட்டியில் நான் பெற்ற பதக்கத்தை முதல்வர் ஜெயலலிதா சமர்பிக்கிறேன் ; கபடி வீரர் சேரலாதன்

உலக கோப்பை கபடி போட்டியில் நான் பெற்ற பதக்கத்தை முதல்வர் ஜெயலலிதா சமர்பிக்கிறேன் ; கபடி வீரர் சேரலாதன்

புதன், நவம்பர் 02,2016,

சென்னை : உலக கோப்பை கபடி போட்டியில் நான் பெற்ற பதக்கத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமர்பிக்கிறேன் என்று உலக கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற சேரலாதன் கூறியுள்ளார்.

உலக கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற சேரலாதன் நேற்று சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து அவர் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெறும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார்.

அதன் பின்னர் சேரலாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக கோப்பை கபடியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தேன். நான் பெற்ற பதக்கத்தை தமிழக முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன். விளையாட்டுத்துறைக்கு அவர் அதிக உதவிகளை செய்துள்ளார். அவரது உடல்நலம் பற்றி டாக்டர்களிடம் விசாரித்தேன். உடல்நிலை வேகமாக தேறி வருவதாக தெரிவித்தனர். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறினார். அவர் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.  இவ்வாறு சேரலாதன் கூறினார்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.