விலைவாசி உயர்வில் இருந்து ஏழைகளை பாதுகாக்க ரூ.25 ஆயிரம் கோடி உணவு மானியம் – இடைக்கால பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு

விலைவாசி உயர்வில் இருந்து ஏழைகளை பாதுகாக்க ரூ.25 ஆயிரம் கோடி உணவு மானியம் – இடைக்கால பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு

புதன், பெப்ரவரி 17,2016,

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வில் இருந்து ஏழை, நடுத்தர வருவாய் குடும்பங்களை பாதுகாப்பதற்காக கடந்த 5 ஆண்டுகளில் உணவு மானியமாக 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக 5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் 2016-2017-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் தமிழக அரசு இதுவரை மேற்கொண்டுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. லெவி சர்க்கரை நிறுத்தப்பட்ட போதிலும், கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் 50 காசுகள் என்ற மானிய விலையில், மாதந்தோறும் 36,500 டன் சர்க்கரையை தொடர்ந்து தமிழக அரசு வழங்கி வருகிறது.

மேலும், பருப்பு வகைகளை கிலோ 30 ரூபாயிலும், சமையல் எண்ணெய் லிட்டர் 25 ரூபாய் அளவிலும் வழங்கப்படுகிறது. உணவு மானியமாக 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைக்கால வரவு செலவு திட்டத்தில் இதற்காக 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

71 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் – 100 கோடி ரூபாய் அளவிலான விலை கட்டுப்படுத்தும் நிதியம் – மாநகரங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் 530 அம்மா உணவகங்கள் – 106 அம்மா மருந்தகங்கள் – அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் போன்ற புதுமையான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன – கடந்த 5 ஆண்டுகளில் சாலைக்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 14,841 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

5,935 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள், 6,740 கிலோ மீட்டர் முக்கிய மாவட்ட சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன – இடைக்கால வரவு செலவு திட்டத்தில் இப்பணிகளுக்காக 2,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – சென்னை பெருநகர்ப் பகுதியில் ஆயிரத்து 195 புள்ளி மூன்று ஐந்து கோடி ரூபாய் செலவில் பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – மேலும், ஆயிரத்து 116.94 கோடி ரூபாய் மதிப்பில் 52 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாலப்பணிகள் தமிழக அரசால் முடிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி சாலையாக ஆக்கும் பணிகள் 314 புள்ளி ஒன்று ஐந்து கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன- சென்னை சுற்றுவட்டச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை முடிவு செய்யப்படும் நிலையில் உள்ளது- நெடுஞ்சாலைத்துறைக்காக இடைக்கால வரவு செலவு திட்டத்தில் 8,486.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது;

முதலமைச்சரின் பெரும் முயற்சியால், சென்னை மாநகரப் பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்து 510 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன;

கடந்த 5 ஆண்டுகளில் மாணவ-மாணவியர் பயணக்கட்டண மானியமாக 2,276 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது – வரும் நிதியாண்டில் போக்குவரத்துத்துறைக்கு ஆயிரத்து 590 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது;

முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் இ-சேவை மையங்களை வெற்றிகரமாக அமைத்துள்ளது – இந்நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக லாபம் ஈட்டும் நிறுவனமக மாறியுள்ளது – தற்போது இந்நிறுவனத்தில் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 70 புள்ளி ஐந்து இரண்டு லட்சமாக உயர்ந்துள்ளது – தமிழக அரசுக்கு 2 முறை “வெப் ரத்னா” என்ற தேசிய விருது கிடைத்துள்ளது;

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு வெற்றிகரமாக நடத்தியது – இதன்மூலம் 4.70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 2 புள்ளி நான்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது;

கோயம்புத்தூரில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு 3-வது உயிரி தொழில்நுட்பப் பூங்காவும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் 700 கோடி ரூபாய் செலவில் கனரக தொழில் உதிரி பாக உற்பத்தி மையமும், வயலூரில் 264 கோடி ரூபாய் செலவில் பாலிமர் தொழிற்பூங்காவும் அமைக்கப்படவுள்ளன;

கடந்த 5 ஆண்டுகளில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் 91 ஆயிரத்து 210 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது – தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் ஆயிரத்து 859 கோடி ரூபாய் அளவில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன – இதன்மூலம் வட்டி மானியத்தால் 4 ஆயிரத்து 237 தொழில் அலகுகள் பயன்பெற்றுள்ளன – புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஆயிரத்து 586 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது – கடந்த பொங்கல் பண்டிகையின்போது 167 புள்ளி எட்டு ஒன்பது லட்சம் சேலைகளும், 167 புள்ளி எட்டு ஒன்று லட்சம் வேட்டிகளும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன – இதற்காக சுமார் 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது;

நெசவாளர்களுக்கு என 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தையும் அறிவித்து, 260 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன – கூட்டுறவு நூற்பாலைகளை நவீனப்படுத்த 147 கோடியே 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது – திருப்பூரில் கழிவு நீர் வெளியேறாத வகையில் பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயங்கச் செய்வதற்காக சுமார் 203 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதற்காக இதுவரை சுமார் 112 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது – இதேபோல நாமக்கல், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களிலும் பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.