உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள்,முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனைகளை கூறி தீவிர வாக்கு சேகரிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள்,முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனைகளை கூறி தீவிர வாக்கு சேகரிப்பு

திங்கள் , அக்டோபர் 03,2016,

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், வரும் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், மாநகராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் எண்ணற்ற சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் விளக்கமாக எடுத்துக்கூறி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி 8-ஆவது வார்டில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, திருவொற்றியூர், மார்க்கெட் பகுதி, ஏகவல்லியம்மன் கோயில் தெரு, காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை பொது மக்களிடம் தொண்டர்கள் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி 192-வது வார்டில் போட்டியிடும் கழக வேட்பாளரை ஆதரித்து, நீலாங்கரைக்குட்பட்ட பிள்ளையார் கோயில், பாரதி நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொண்டர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டு மற்றும் 52 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொண்டர்கள் வீதி வீதியாகச்சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஈரோடு மாநகராட்சி 7-வது வார்டு கழக வேட்பாளரை ஆதரித்து பி.பி. அக்ரஹாரம், பாவேந்தர் வீதி, ஐயர்வீதி, பழைய மாரியம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழகத் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சி 23-வது வார்டு பாளையங்கோட்டை பகுதியில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதேபோன்று 40 மற்றும் 44-வது வார்டு நெல்லை நகரப் பகுதிகளில் கழக வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய 6-வது வார்டு மற்றும் 13-வது வார்டுகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த வார்டுகளுக்கு தொடர்புடைய கிராமங்களில் தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 21-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாநகராட்சி 22-வது வார்டில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர், முதலமைச்சரின் எண்ணற்ற சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.

இதேபோன்று திருச்சி மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட காஜாபேட்டைரோடு, காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழக வேட்பாளருக்கு ஆதரவாக கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 8-வது மற்றும் 15-வது வார்டுகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து, அண்ணா காலனி, டீச்சர்ஸ் காலனி, வேலம்பாளையம், சொர்ணபுரி லேஅவுட், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முழுவீச்சில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.