எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்

ஞாயிறு, பெப்ரவரி 21,2016,

தே.மு.தி.க.விலிருந்து 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று  பதவி விலகியுள்ளதையடுத்து, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரத்தையும், சலுகைகளையும் இழப்பதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அறிவித்துள்ளது. 

தே.மு.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் தே.மு.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளதால், சட்டமன்றப் பேரவை விதி 2ஓ-வின்படி, எதிர்க்கட்சித் தலைவராக பேரவைத் தலைவரால் அங்கீகரிப்பதற்குரிய தகுதியை திரு. விஜயகாந்த் இழப்பதன் காரணமாக, அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரத்தையும், சலுகைகளையும் இழக்கிறார் என்று பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். 

மேலும், தற்போது சட்டமன்றத்தில் 24 குறைவெண் கொண்ட எந்த சட்டமன்றக் கட்சியும் இல்லாததால், எதிர்க்கட்சித் தலைவர் என்று வேறு எந்த சட்டமன்றக் கட்சித் தலைவரையும் அங்கீகரிக்க இயலாது என்றும் பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார் என சட்டமன்றப் பேரவைச் செயலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.