ஏர்செல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரா்கள் நீதிமன்றத்தில் ஆஜர். முன்ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு

ஏர்செல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரா்கள் நீதிமன்றத்தில் ஆஜர். முன்ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு

சனி, ஆகஸ்ட் 27,2016,

742 கோடி ரூபாய் ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு 742 கோடியே 58 லட்ச ரூபாய் கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுக்கள் மீது கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் அளிக்க அமலாக்கத்துறை தரப்பில் மிகக் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இதனையடுத்து, இன்றைக்கு இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, தயாநிதி, கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இன்றைய விசாரணையின் போதும் மூவருக்கும் முன்ஜாமீன் வழங்க சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிபிஐ தரப்பில் முன்ஜாமீனை எதிர்ப்பதற்கான வாதங்களை வரும் 29-ஆம் தேதி மனுவாக தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாநிதி, கலாநிதி மாறன், காவேரி கலாநிதி ஆகியோருக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்றைக்கு இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, தயாநிதி, கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இன்றைய விசாரணையின் போதும் மூவருக்கும் முன்ஜாமீன் வழங்க சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிபிஐ தரப்பில் முன்ஜாமீனை எதிர்ப்பதற்கான வாதங்களை வரும் 29-ஆம் தேதி மனுவாக தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிபதி சைனி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.