ஏழை மாணவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.21 லட்சம் கல்வி உதவித் தொகை ; அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் வழங்கினார்

ஏழை மாணவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.21 லட்சம் கல்வி உதவித் தொகை ; அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் வழங்கினார்

செவ்வாய், நவம்பர் 15,2016,

மருத்துவம், பொறியியல் படிப்புகளை படிக்கும் 29 ஏழை, எளிய மாணவ -மாணவியருக்கு அதிமுக சார்பில் கல்வித் தொகை வழங்கப்பட்டது. இந்த உதவிகளை அம்மா பெஸ்ட் நல அறக்கட்டளை சார்பில் அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் நேற்று திங்கள்கிழமை வழங்கினார்.

இதுகுறித்து, புரட்சி தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.இ., பி.எஸ்சி., முதலான படிப்புகளை படித்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் தங்கள் படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் வைத்திருந்தனர்.

தமிழகம் முழுவதும் எண்ணற்ற மாணவ, மாணவியரின் கல்விக்கென ஆண்டுதோறும் கல்விக் கட்டண நிதியுதவிகளை கருணை உள்ளத்தோடு வழங்கி வரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஏழை – எளிய மாணவ, மாணவிகளின் வேண்டுகோளை கருணையோடு பரிசீலித்து, ‘‘புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்’’–ல் இருந்து கல்வி நிதியுதவியினை வழங்குமாறு ஆணையிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 14–11–2016 அன்று (நேற்று) அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சரும், ‘‘புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்’’–ன் நிர்வாக அறங்காவலருமான ஜெயலலிதாவின் மேலான ஆணைக்கிணங்க, அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படித்து வரும் மாணவ, மாணவிகளான எஸ்.நஸ்ரின், எம்.சந்திரமவுலி, எம்.விக்னேஷ், எஸ்.அரிகரன், ஏ.ஜெயஸ்ரீ, ஜி.தினேஷ்ராம், டி.ஜெகதீஸ், டி.லோகேஸ்வரன், ஜெ.கவுரிசங்கரி, எம்.சரவணக்குமார், கே.மோகன்ராஜ், வி.மாதவன், ஆர்.வி.ராசிகா, கே.சாந்தினி, ஆர்.மனோஜ்குமார், ஆர்.செல்வபாண்டி, டி.இலக்கியா எழிலரசி, எஸ்.ஜெ.சூரியபிரகாஷ், பி.கோகிலா, டி.கார்த்திக், எம்.மகேஷ்குமார், எஸ்.சரிதா, எம்.சுர்ஜித், எம்.பிருந்தாதேவி, ஆர்.குட்ரோஸன் ஆகியோருக்கும்; பி.டி.எஸ். படித்து வரும் மாணவன் எஸ்.படையப்பா; என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஆர்.பழனிவேல், ஜி.சவுமியா மற்றும் பி.எஸ்சி. மாணவி ஆர்.பிரியதர்ஷினி ஆக மொத்தம் 29 மாணவ, மாணவிகளின் கல்லூரி கட்டணமாகிய ரூ.21 லட்சத்து 11 ஆயிரத்து 268–க்கான வரைவோலையை வழங்கினார்.

தங்கள் குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்து, கல்வி பயில்வதற்கு தாயுள்ளத்தோடு நிதியுதவி வழங்கி உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தங்களது குடும்பத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்து கொண்டனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.