ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு என அறிவிப்பு

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு என அறிவிப்பு

வெள்ளி, மார்ச் 11,2016,

‘தமிழகத்தில், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்கள் வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பது’ என, முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொது செயலர் போசு கூறியதாவது:

சட்டசபை தேர்தலில், யாருக்கு ஆதரவு என்பது குறித்து, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களிடம் மாவட்ட வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, ஆறு மாவட்டங்களில் நடந்த ஆலோசனையில்,

அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். கிராம நிர்வாக அலுவலர்களை, 1980ல் முழுநேர பணியாளராக உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1989ல், வி.ஏ.ஓ., பதவியை ஒழிக்க சட்டம் கொண்டு வந்தபோது அப்பதவியை பாதுகாத்தவர் முதல்வர் ஜெயலலிதா.

எனவே, வி.ஏ.ஓ.,க்கள் அனைவரும் வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்து, நன்றியை வெளிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.