கடலில் தவறி விழுந்து பலியான 8 மீனவர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

கடலில் தவறி விழுந்து பலியான 8 மீனவர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017,

சென்னை : மீன்பிடிக்க சென்று கடலில் தவறி விழுந்து இறந்த எட்டு மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 1 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி வெளியிட்ட அறிக்கை :-

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், திருமுல்லைவாசல் கிராமத்தைச்சேர்ந்த பாவாடை என்பவரின் மகன். சந்திரகாசன்;ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த. பிச்சை என்பவரின் மகன். முனியசாமி;காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், சட்ராஸ்குப்பம் கிராமம்,ஊத்துக்காட்டு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த . கன்னியப்பன் என்பவரின்மகன் பாஸ்கரன்;காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், புதுப்பட்டினம் கிராமத்தைச்சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் பிரதாப்;திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், விஜயாபதி கிராமத்தைச் சேர்ந்சூசை என்பவரின் மகன் அந்தோணிசாமி;நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தஇருசப்பன் என்பவரின் மகன் முருகானந்தம்;விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பொம்மையார்பாளையம் கிராமத்தைச்சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் ராமலிங்கம்;கடலூர் மாவட்டம், கடலூர் முதுநகர், அக்கரைகோரி முகத்துவாரப் பகுதியில்மீன் பிடிக்கச் சென்ற ஆறுமுகம் என்பவரின் மகன் குணசேகரன்;ஆகிய எட்டு மீனவர்கள் கடலில் மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது,கடலில் தவறி விழுந்து உயிரிழந்தனர்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும்துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிழந்த மேற்கண்ட எட்டு மீனவர்களின்குடும்பங்களுக்கு எனதுஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின்குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.