கட்டணமில்லா 100 யூனிட் மின்சார திட்டத்தால் மின்சாரக் கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதால் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொது மக்கள் நன்றி

கட்டணமில்லா 100 யூனிட் மின்சார திட்டத்தால்  மின்சாரக் கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதால் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  பொது மக்கள் நன்றி

வியாழன் , ஜூன் 02,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழகத்தில் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரத் திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மின் நுகர்வு கட்டணத்தை செலுத்த தொடங்கியுள்ள பொதுமக்கள், தங்களது கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதால், மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளன்றே, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணமில்லா திட்டத்திற்கு, பதவியேற்ற முதல் நாளே கையெழுத்திட்டார். முதல் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரத்திட்டம், கடந்த மாதம் 23-ம் தேதியன்றே அமலுக்கு வந்தபோதிலும், அதற்கான கட்டணத்தை பொதுமக்கள்நேற்று முதல் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதா, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தில் முதல் 100 யூனிட் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனை மீண்டும் பொறுப்பேற்ற நாளன்றே தலைமைச் செயலகத்திற்கு சென்ற முதலமைச்சர், கோப்பில் கையெழுத்திட்டு, நிறைவேற்றினார். கடந்த மாதம் 23-ம் தேதியில் இருந்து 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதால் பயனடைந்துள்ள பொதுமக்கள்,  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.