கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி: முதலமைச்சருக்கு நன்றி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி: முதலமைச்சருக்கு நன்றி

வெள்ளி, பெப்ரவரி 12,2016,

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சைக்கு அடுத்தபடியாக அதிக அளவு நெல் விவசாயம் செய்யப்படும் மாவட்டம் கன்னியாகுமரி. இம்மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் போக நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கன்னியாகுமரி மற்றும் தேரூர் ஆகிய 2 இடங்களில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாக கொண்டு சென்று, விற்பனை செய்து வருகின்றனர். தாங்கள் சாகுபடி செய்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.