கருணாநிதி பச்சை தமிழன் அல்ல பச்சோந்தித் தமிழன் : மதுரை பொதுக்கூட்டத்தில் விந்தியா தாக்கு

கருணாநிதி பச்சை தமிழன் அல்ல பச்சோந்தித் தமிழன் : மதுரை பொதுக்கூட்டத்தில் விந்தியா தாக்கு

வியாழன் , மார்ச் 31,2016,

துரை அ.தி.மு.க. நகர் கழக செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க.விற்கு ஒரு குட்டி பேச்சாளர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.ஆம் பள்ளிச் சிறுவனுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த சிறுவன் ஜெயலலிதாவின் திட்டங்களை எடுத்துக்கூறி அடுக்கு மொழியில் அம்மாவின் புகழை அமர்க்களப்படுத்த கைதட்டளும், விசில் சத்தமமும் காதை கிழித்தது.

இதை தொடர்ந்து, அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பேசும்போது, ”பேசும் இடங்களுக்கு கூட்டம் வந்தால் அது மீட்டிங். கூட்டம் இருக்கும் இடத்துக்கு பேச போனா அது செட்டிங். அப்படித்தான் ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் நாடகம் நடந்தது. அது மக்களை ஏமாற்றுவதற்கான பயணம். ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு என்னத்தை சாதித்தார்.

நான் சங்கமம் படத்தில் நடித்ததில் இருந்து சொத்து சேர்த்து பார்கிறேன் சேர்க்கவே முடியவில்லை. ஆனால் தி.மு.க.வினர், சென்னை சங்கமம் என்ற பெயரில் ஒரே நாளில் சம்பாதித்து விட்டார்கள். கருணாநிதி, எனக்கு இது கடைசி தேர்தல், கடைசி தேர்தல் என்று ஒப்பாறி வைக்கிறார்.

சக்கரை நோயாளி எப்படி இனிப்பை பார்த்ததும் பல்லை காட்டுவாரோ அதைப்போல் காங்கிரஸ் மூலம் குஷ்பு கிடைத்ததை நினைத்து கருணாநிதி சந்தோசப்படுகிறார். கருணாநிதி பச்சை தமிழன் அல்ல பச்சோந்தித் தமிழன். இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் கருணாநிதி மற்றும் அவரது குடும்பம் மட்டுமே சந்தோஷப்படும். ஆனால், அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தமிழகமே சந்தோஷப்படும்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி துரோகக் கூட்டணி. எதிரியை நம்பலாம் துரோகியை நம்பக் கூடாது. நாட்டுக்காக சண்டை போட்ட காங்கிரசின் நிலை இன்று படுமோசமாக உள்ளது. காங்கிரஸ்சில் குஷ்பு, நக்மா இருப்பதற்கு இளங்கோவன் சந்தோசபட வேண்டாம். காரணம், சார்ஜ் இல்லாத போனுக்கு இரண்டு சிம் எப்படியோ அப்படித்தான் அவர்கள் காங்கிரஸ்சில் இருப்பது.

விஜகாந்த், பாகுபலி படத்தில் வரும் வித்தியாசமான மொழி பேசும் வில்லனுக்குகூட ஈடு இல்லை. ஏன் என்றால், அவர்கள் பேசுவதுகூட கொஞ்சம் புரிந்தது. ஆனால், விஜயகாந்த் பேசுவது சுத்தமாக புரியவில்லை. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தங்களை பாண்டவர்கள் என்கிறார்கள். அங்கே, தர்மர் கைகள் உதவி செய்து, உதவி செய்து சிவக்கும். ஆனால் இங்கோ, தர்மர் குடித்து குடித்து கண் தான் சிவக்கிறது” என்றார்.

விஜயகாந்தின் செய்கைகளை தமிழக மக்கள் எள்ளி நகையாடி வருகிறார்கள். அவரை தலைவராக மக்கள் ஏற்கவில்லை. ஆனால் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜயகாந்த் அடுத்த முதல்வர் என்கிறார்கள். இது ஒருபோதும் பலிக்காது. அதுபகல் கனவாகவே இருக்கும்.

முதல்–அமைச்சர் பதவி என்பது மக்களுக்காக சேவை செய்யும் பதவி, குடும்பத்தை வளப்படுத்தும் பதவி அல்ல. ஆனால் 5 முறை குடும்பத்தை வளப்படுத்தி கொண்ட சிலர் மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்கிறார்கள். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு வைத்து உள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் 6–வது முறையாக மட்டுமல்ல, தமிழகத்தின் நிரந்தர முதல்–அமைச்சராக ஜெயலலிதா இருப்பார்.

இவ்வாறு விந்தியா பேசினார்.