கருணாநிதி பொய் பிரச்சாரம் செய்கிறார் : 9 துறைகளில் நிறைவேறிய பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்க அறிக்கை

கருணாநிதி பொய் பிரச்சாரம் செய்கிறார் :  9 துறைகளில் நிறைவேறிய பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்க அறிக்கை

சனி, மே 14,2016,

விதி எண் 110-ன் கீழ் மேலும் 9 துறைகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:- கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி  கருணாநிதியும், திமுகவினரும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நான் சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களில் சில திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தக் கூடியவை. கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் கட்டுவது போன்ற அறிவிப்புகள் ஒன்றிரண்டு வருடங்களில் நிறைவேற்றப்படக் கூடியவை. நில எடுப்பு செய்து பணிகள் நிறைவேற்றக் கூடிய ரயில்வே மேம்பாலங்கள், புறவழிச் சாலைகள், சாலைகள் விரிவாக்கம் போன்ற பணிகள் நில எடுப்புக்குத் தேவையான காலத்தையும் சேர்த்து ஒரு சில வருடங்கள் பிடிக்கக் கூடியவை. 

சில்ல ஹல்லா புனல் மின் திட்டம் போன்ற பெரும் திட்டங்கள் 6-7 ஆண்டுகளில்  தான் செயல்பாட்டுக்கு கொண்டு வர இயலும்.  110 விதிகளின் கீழ் நான் அறிவித்தவை அனைத்தும் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  எனவே, துறை தோறும் நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றி எனது அறிக்கைகளின் மூலம் நான் தெரிவித்துள்ளேன். இது வரை 20 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நான் தெரிவித்துள்ளேன். தற்போது எஞ்சிய 9 துறைகளில்  நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விவரங்களை நான் அளிக்க விரும்புகிறேன்.
1.கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை:-
 மீன்வளத்திற்கென, “மீன்வளப் பல்கலைக்கழகம்’’ ஒன்று நாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
 கடல் மீனவர்கள் பாதுகாப்பிற்கு தடையில்லா தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தி தருவதற்கும்  மற்றும் VHF மற்றும் HF கருவிகள் வழங்குவது தொடர்பாக மத்திய கம்பியில்லா திட்ட ஆணையத்தின் உரிமம் பெற்றிட அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் மீனவர்களுக்கு  VHF கருவிகள் வழங்கப்படும்.
 சென்னை சேத்துப்பட்டு ஏரியில் “பொழுது போக்கு தூண்டில் மீன்பிடிப்பு மற்றும் பசுமை பூங்கா” அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
 சென்னை மீன்பிடி துறைமுகம் 75 கோடி ரூபாய் செலவில்  நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
 திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, வேலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரம்-திருவள்ளூர் பால் கூட்டுறவு ஒன்றியங்களின் பால்பண்ணைகளில் உள்ள குளிர்விப்புத் திறன் வசதி, குளிரூட்டப்பட்ட பாலைச் சேமிக்கும் கொள்கலன்கள் வசதி; பாலை திடப்படுத்தும் வசதி, பாலிலிருந்து நுண் கிருமியை நீக்குவதற்கான வசதி, பாலிலிருந்து வெண்ணெயை பிரித்தெடுத்து சமன்படுத்தும் வசதி, பால் விற்பனை செய்ய ஏதுவாக குளிர் பதனக் கிடங்கின் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் மின் இயக்கு திறன் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.
 அம்பத்தூர் பால் பண்ணையில் சக்தி சேமிப்பு உயர்நிலை அழுத்தக் கருவிகள், பால் திடப்படுத்தும் கருவிகள், வெப்பம் ஊடுருவாத சுவர் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
 சோழிங்கநல்லூர் பால்பண்ணைக்கு மணிக்கு 6,500 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட உச்ச வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பாலை நுண்ணுயிர் நுழையா பைகளில் அடைக்கும் இயந்திரம் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.
 மாதவரம் பால்பண்ணையில் சக்தி சேமிப்புக் கருவியுடன் கூடிய உறைநிலை நீர்த் தொட்டிக் கருவிகள், புதிய குளிர்விக்கும் கருவிகள் மற்றும் பசுமை பால்பண்ணை சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 அம்பத்தூர் மற்றும் மாதவரம் பால்பண்ணைகளில் குளிரூட்டம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
 பால் உற்பத்தியாளர்களுக்கு பாலின் தரத்திற்கேற்ற விலை கிடைக்கும் வகையில், பாலின் தரம் அறிய உதவும் 3,336 பால் பகுப்பாய்வு கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
 தரமான பாலினை தொடர்ந்து வழங்கி வரும் உறுப்பினர்கள் மற்றும் சங்கங்கள் கண்டறியப்பட்டு, “நட்சத்திர அந்தஸ்து” மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
  ஒன்றியங்களில் தொடர்ந்து தரமான பால் வழங்கும் முதல் 10 சங்கங்கள் கண்டறியப்பட்டு,  ஒரு ஒன்றியத்திற்கு 85 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 இந்தியாவிலேயே முதன் முறையாக விலங்கின மருத்துவத்திற்காக உலக தரம் வாய்ந்த “ஆதாரச் செல் ஆராய்ச்சி மற்றும் மறுசீரமைப்பு மையம்” சிறந்த மேலாண்மை பயிற்சி வசதியுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
 கால்நடை பெரு மருத்துவமனைகள், கால்நடைப் பண்ணைகளில், 53 நுண்ணொலி நுண்ணாய்வுக் கருவிகள் (Ultra Sound Scanners) வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட கால்நடை நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  மேலும், கூடுதலாக 45  நுண்ணலை ஆய்வு கருவிகள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் பால்பண்ணை மற்றும் பால் குளிரூட்டும் நிலையங்களில் இயந்திர தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் நிறுவப்படும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
 ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் தீவன தொழிற்சாலையை விரிவாக்கம் செய்து தீவன உற்பத்தி திறனை நாளொன்றுக்கு 150 டன் என்ற அளவிற்கு உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 கடல் மீனவர்களுக்கு தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண தொகை 1,800 ரூபாயிலிருந்து 2,700 ரூபாயாக உயர்த்தப்பட்டு 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 1,94,436  கடல் மீனவர்களுக்கு 34.99 கோடி ரூபாய் நிவாரணத் தொகை தேசிய மின்னணு பண பரிமாற்றம் (NEFT) மூலம் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.  
 கடல் மீனவ மகளிருக்கு சேமிப்பு மற்றும் நிவாரண தொகை 1,800 ரூபாயிலிருந்து 2,700 ரூபாயாக உயர்த்தப்பட்டு, 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,76,786  கடல் மீனவ மகளிருக்கு 31.82 கோடி ரூபாய் நிவாரணத் தொகை தேசிய மின்னணு பண பரிமாற்றம் (NEFT) மூலம் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. 
 கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்தூர் மற்றும் இரையுமன்துறை ஆகிய இடங்களில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், கோவளம் கடற்கரை கிராமத்தில் கடலரிப்பு தடுப்பு அரண் (Short
Groynes) அமைப்பதற்கு, பணி ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் துவங்கும் நிலையில் உள்ளன.
 கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை, ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை, மற்றும் தேனி மாவட்டத்தில் வைகை அணை ஆகிய  இடங்களில் உள்ள அரசு மீன் குஞ்சு வளர்ப்புப் பண்ணைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 ராமநாதபுரத்தில் புதிதாக தோற்றவிக்கப்பட்ட மீன் வளத் துறை துணை இயக்குநர் அலுவலகம், இரண்டு மீன் வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் மீன்பிடி துறைமுக உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களுக்கு ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம் கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
 நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் மீன் வளத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகம், மீன் வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட 4 அலுவலகங்களுக்கு ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம் கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
 188 கால்நடை மருந்தகங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டு, 121 கால்நடை மருந்தகங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  
 மாவட்ட கால்நடைப் பண்ணைகளின் கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயர் மரபுத் திறன் கொண்ட கால்நடைகளை கொள்முதல் செய்யும் குழு மூலம் கால்நடைகள் கொள்முதல் செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளன.
 ராணிப்பேட்டை கால்நடை தடுப்பு மருந்து உற்பத்தி நிலையத்தை “சிறந்த ஆய்வக நடைமுறைகள்” தரத்திற்கு மேம்படுத்த, புதிய கால்நடை நோய் தரக் கட்டுப்பாட்டுக் கூடம்  உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 சைதாப்பேட்டையில், கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு மீனவர் கூட்டுறவு இணையம் மற்றும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் ஆகிய அலுவலகங்களில் பணி புரியும் அலுவலர்களுக்கு போதுமான இட வசதியுடன் ஒரு புதிய ஐந்து மாடி பல்துறை அலுவலக வளாகம் அமைப்பதற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில் கால்நடை உயிரியல் பாதுகாப்பு சோதனைச் சாலை மற்றும் சிறப்பு ஆராய்ச்சி மையம் என்ற உலகத் தரமிக்க சிறப்பு ஆராய்ச்சி மையம் உருவாக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 தொலைதூர கிராமப்புற விவசாயிகளின் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் பொருட்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக  “நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் (Animal Mobile Medical Ambulance) அறிமுகப்படுத்தப்பட்டு, முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு, மாவட்டத்திற்கு இரண்டு வண்டிகள் வீதம் மொத்தம் 10 வண்டிகளில் உபகரணங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 தருமபுரி, காஞ்சிபுரம், திருவள்ளுர், நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்துhர் ஆகிய மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் பால்பண்ணைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 மாவட்டங்களிலிருந்து பால் கொண்டு வருவதற்கு தனியார் பால் டேங்கர்களைத் தவிர்க்கும் பொருட்டு 61 புதிய பால் டேங்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
 ஈரோடு, விருதுநகர் மற்றும் தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தை சார்ந்த கிராமப்புற பகுதிகளில் குளிரூட்டு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 சென்னை மாநகர பால்பண்ணையில் உயர் வெப்ப நிலையில் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைக்கும் இயந்திரங்கள் நிறுவத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் 5 லிட்டர் பால் பாக்கெட்டுகள் அடைக்கும்  இயந்திரம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. 
 சென்னை பெருநகரில் ஆவின் பால் பொருட்கள் நுகர்வோர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும் வகையில், ஆவின் நிறுவனத்தின் 16 மண்டலங்களில், ஒவ்வொரு மண்டலத்திலும், ஒரு அதி நவீன பாலகம் வீதம், 16 பாலகங்கள் அமைக்கும் திட்டத்தில்  5 பாலகங்கள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 11 பாலகங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 சென்னை மாநகரத்தில் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று ஆவின் பால் பண்ணைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மே-2016ல் முடிவடையும்.  
 தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் பேட்டோடை, தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கித்துறை மற்றும் பழைய காயல், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாமந்தான்பேட்டை மற்றும் திருமுல்லை வாசல் ஆகிய 5 இடங்களில் மீன் இறங்கு தளங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 தமிழ்நாட்டில் மீன் குஞ்சு உற்பத்தியை அதிகரித்திடும் பொருட்டு, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் திருக்காம் புலியூர், தருமபுரி மாவட்டம் சின்னாறு, கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு, தஞ்சாவூர் மாவட்டம் தட்டான்குளம், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி, சிவகங்கை மாவட்டம் பிரவலூர் மற்றும் மாணகிரி, ஆழியார், அமராவதி மற்றும் திருமூர்த்தியிலுள்ள மீன் குஞ்சு உற்பத்தி பண்ணைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 அலங்கார மீன்களில் அதி நவீன உற்பத்தி மற்றும் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் மூலம் தமிழ்நாட்டில் அலங்கார மீன் வளர்ப்பு தொழில் முனைப்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் 2016-இல் முடிவடையும்.
2. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை:-
 தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களின் உற்பத்தியை அதிகப்படுத்துதல், போட்டித் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றைக் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம்  செயல்படுத்த, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தை தமிழக அரசு முகவராக நியமித்து, 17 குழுமங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 10 உதவி வளர்ச்சி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
 கிண்டி அரசினர் தொழில்நுட்ப பயிலகம், திண்டுக்கல் கருவி பொறியியல் பயிலகம்  மற்றும் விருத்தாச்சலம் பீங்கான் தொழில்நுட்ப பயிற்சி நிலையம் ஆகிய பயிற்சி நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
 மாநிலம் முழுவதும் மாவட்ட தொழில் மையங்களுக்கான 11 புதிய மற்றும் 18 கூடுதல் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
 தொழில் வளர்ச்சியில் பின்தங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வட்டாரங்களிலும் அமைக்கப்படும் வேளாண்சார் குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அவற்றின் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கு வழங்கப்படும் மானியம் மொத்த மதிப்பில் 15 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 புதிய தொழிற்பேட்டைகள் அமைத்திட, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலமாக நில வங்கி அமைக்க சுமார் 3,044 ஏக்கர் பரப்பிலான நிலம் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், அதாவது SIPCOT-ஆல் உருவாக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்படும் தொழிற்பேட்டைகளில் உள்ள மொத்த நிலப் பரப்பில் குறைந்த பட்சம் 20 விழுக்காடு நிலம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு உரிய நிலம் கிரய விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு,  ஆணைகள் வெளியிடப்பட்டன. இந்த நிலத்தினை, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேம்படுத்தி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.
 சிறு தொழில் முனைவோர் விரைவாக தொழில் துவங்கும் வகையில், 50 சென்ட் வரையிலான தொழிற்கூடங்களை ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 தனியார் தொழில் முனைவோர் அமைப்புகள், நகர்ப் பகுதியில் உள்ள தொழிற்கூடங்களை நகருக்கு வெளியே உருவாக்க முன் வரும் பட்சத்தில், மின் இணைப்பு, விற்பனை வசதி மையங்கள் முதலிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அரசு மானியம் 75 விழுக்காடு என்ற அளவில் அதிக பட்சமாக 15 கோடி ரூபாய் வரை வழங்கிட ஆணையிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
 தனியார் தொழில் முனைவோர் அமைப்புகள், புதிய தொழிற் குழுமம் மற்றும் தொழிற்பேட்டை அமைக்க முன் வரும் பட்சத்தில் அரசு மானியம் 50 விழுக்காடு என்ற அளவில் அதிக பட்சமாக 10 கோடி ரூபாய் வரை வழங்க ஆணையிடப்பட்டு மேட்டுப்பாளையம் தேயிலை குழுமம், மதுரை பொறியியல் குழுமம், ராமநாதபுரம் மிளகாய் பதப்படுத்தும் குழுமம், விருதுநகர் ஜவுளி குழுமம் மற்றும் கோயம்புத்தூர் பொறியியல் குழுமம் ஆகிய குழுமங்களுக்கு மாநில இயக்க குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நடைமுறையில் உள்ள நில விலை நிர்ணய முறை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உகந்த வகையில் மாற்றி அமைத்து, லாப நோக்கமற்ற விலை நிர்ணயக் கொள்கை  உருவாக்கப்பட்டுள்ளது. 
 அரசு மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகள் மற்றும் தொழிற் கூடங்களை 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் வழங்கிடவும் மற்றும் 30 ஆண்டு கால முடிவில் தொழில் முனைவோருக்கு முழு கிரய விலையில் வாங்கவும் வாய்ப்பளித்து உரிய ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
 புதிய தொழிற்பேட்டைகள் அமைப்பதில் ஏற்படும் கால தாமதத்தினை தவிர்க்கும் பொருட்டு தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான ஒற்றைச் சாளர தீர்வுக் குழு, அதாவது Single Window Clearance Committee ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு, கூடுதலாக 16 கோடி ரூபாய் அரசின் பங்கு மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.
 திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில், சிறுதொழில் முனைவோர் தொழிற் கூடங்களை அமைத்திட 20 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடித் தொழில் வளாகம் (Multi-storeyed Industrial Complex) கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களை உருவாக்கிட, தொழில் முனைவு மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கிட, தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு 5 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
 தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவன அமைப்புகள் தொழிற்பேட்டைகளை ஆரம்பிக்க முன் வந்தால், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அவற்றுடன் இணைந்து 10 விழுக்காடு வரை மூலதனத்தைச் செலுத்தி, புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மனித ஆற்றலை வழங்கிடும் வகையிலும்; வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் “அம்மா திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு, 25,000 நபர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும், இதில் மகளிருக்கென 30 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 தமிழக அரசு உருவாக்கியுள்ள வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும்  திட்டத்தின் கீழ், 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் தொழில் நிறுவனங்களை அமைக்க முன் வருவோருக்கு, திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு அல்லது அதிகபட்சம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் அரசு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன. 
 காஞ்சிபுரம் மாவட்டம், தண்டரை மற்றும் கரூர் மாவட்டம், புஞ்சை காளக்குறிச்சி ஆகிய இடங்களில் புதிய தொழிற்பேட்டை அமைப்பதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
 விழுப்புரம் மாவட்டம், காட்டு வன்னஞ்சூர்;  தருமபுரி மாவட்டம், பர்வதனஹள்ளி; அரியலூர் மாவட்டம், மல்லூர் மற்றும் நாமக்கல் மாவட்டம், வேட்டம்பாடி ஆகிய இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.
 திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம்;  சேலம் மாவட்டம், கருப்பூர்,  திருச்சி மாவட்டம், வாழவந்தான் கோட்டை; மற்றும் மதுரை மாவட்டம், கப்பலூர் ஆகிய 5 மகளிர் தொழிற் பூங்காக்களில் உலகத் தரம் வாய்ந்த நேர்த்திமிகு மையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 சென்னை கிண்டியிலுள்ள அரசு தொழில்நுட்ப பயிற்சி மையத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிற் பேட்டையில் ஒரு புதிய மர அறைகலன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தமிழ்நாடு சிறு தொழில் கழகத்தின் கீழ் அமைப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 தமிழ்நாட்டினை ஆசியாவின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைநகரமாக உருவாக்கிடும் வகையில் ஒரு புதிய தொழிற் கொள்கை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 கிண்டி தொழிற்பேட்டையில் ஓர் அடுக்குமாடி தொழில் வளாகம் உருவாக்கிட 0.91 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
3. கூட்டுறவு, உணவு, மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத் துறை:- 
 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு 1,166 புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
 1,24,100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1,044 புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
 139 நலிவடைந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முதல் கட்டமாக 72 சங்கங்களுக்கு சிறப்புக் காசுக் கடன் 36 கோடி ரூபாய் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 
 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள 20,000 மகளிர் உறுப்பினர்களின் கடன் பெறும் தகுதியினை அதிகரிக்க 2,500 ரூபாய் வீதம் 5 கோடி ரூபாய் பங்கு மூலதன மானியம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
 கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 100 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
 மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்டத் திட்டமிடப்பட்டு 5 கிளைகளில் பணிகள் முடிவு பெற்றுள்ளன.  
8 கிளைகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  
 19 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் புதியதாக துவங்கப்பட்டுள்ளன.
 தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியில் “கைபேசி வங்கியியல் சேவை” (Mobile Banking Facility) தொடங்கப்பட்டுள்ளது.
 நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 3 புதிய மலைவாழ் பழங்குடியினர் பெரும் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
 109 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு, சொந்தக் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்பு முறைகளை வலுப்படுத்த 203 கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அறைகள், பாதுகாப்பு கதவுகள் நிறுவும் பணி தொடங்கப்பட்டு, 93 கூட்டுறவு நிறுவனங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நிறுவனங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 2,966 கூட்டுறவு நிறுவனங்களில், பாதுகாப்பிற்காக “உட்சுற்று தொலைக்காட்சி கண்காணிப்பு கேமரா” (CCTV) நிறுவிட பணிகள் நடைபெற்று வருகின்றன.
 1,240 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் கணினி மயம் ஆக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 4,33,500 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 47 சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் எருக்கூர் நவீன அரிசி ஆலையில்
45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் வாயிலாக 118.60 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் 1.07 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 23 கிடங்குகள் 9 மாவட்டங்களில் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு 13 இடங்களில் கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
 கணினிமயமாக்கும் திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 
 தமிழ்நாடு முழுவதும் 54 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 நவீன அரிசி ஆலையிலிருந்து உப பொருளாகக் கிடைக்கும் தவிட்டிலிருந்து சமையல் எண்ணெய் தயாரிக்க திருவாரூர் மாவட்டத்தில் 140 மெட்ரிக் டன் திறன் கொண்ட தவிட்டு எண்ணெய் ஆலை நிறுவுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 84,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட  77 புதிய கிடங்குகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
 காவிரி பாசன மற்றும் காவிரி பாசனமில்லாத 8 மாவட்டங்களில் 28.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 85 புதிய நேரடி கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு, 5 இடங்களில் பணிகள் முடிவுற்றுள்ளன.  
 திருவாரூர், ஈரோடு, ஆரணி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் ஆய்வகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இந்திய நுகர்வோர் கழத்துடன் இணைந்து 5 கோடி ரூபாய் செலவில் சென்னையில் உணவு சோதனைக் கூடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
4.வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை:-
 வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அரசால் வழங்கப்படும் தொகுப்பு நிதி 2 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
 ராணிப்பேட்டை, விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, செஞ்சி, அரூர், அரியலூர், திருப்பூர், அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் திருச்செந்தூர் ஆகிய 10 இடங்களில் உள்ள 16 வணிகவரி அலுவலகங்களுக்காக 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.
 ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், உணவக தங்குமிட வசதிக்கு ஆடம்பர வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு 199 ரூபாயிலிருந்து 499 ரூபாயாக உயர்த்தப்பட்டு 1.7.2013 முதல் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
 வாள் வச்ச கோஷ்டம், தேவக்கோட்டை, ஆற்காடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள வணிக வரி அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சிதம்பரம், கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், வணிகவரித்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் இதர துறைகளுடன் இணைந்து அனைத்து துறைகளுக்கான ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி ஒன்றினை ஓசூரில் நிறுவ, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் திறம்பட பணியாற்றவும், வணிகவரித் துறையை கணினிமயம் ஆக்குவதற்கும், வணிக வரி ஆணையர் அலுவலகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 சென்னை நகரில் 70 வணிகவரி அலுவலகங்களை உள்ளடக்கிய அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த இரண்டு வணிகவரி அலுவலகங்கள் 60 கோடி ரூபாய் செலவில் கட்ட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தென்சென்னை கட்டடத்திற்கான இடம் தொடர்பாக அகில இந்திய வானொலியால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையால் திட்டம் நிலுவையில் உள்ளது.
 26 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளடங்கிய 15 ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகங்கள் மற்றும் 43 தனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
 தமிழ்நாட்டிற்கென தனியாக முத்திரைச் சட்டம் இயற்றும் வகையில் ஒரு சட்ட முன்வடிவு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்டு, அதன்மீது மேதகு குடியரசு தலைவர் அவர்களின் இசைவு எதிர்நோக்கப்படுகிறது.
 முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு 5,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, நடைமுறையில் உள்ளது.
 அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தீ விபத்து தடுப்பு உபகரணங்கள் வழங்க, ஒப்பந்தப்புள்ளி கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை நுண்ணிய படம் பிடிக்கவும் Micro Filming செய்யவும் மற்றும் அவற்றை மின்னணு மயம் ஆக்கவும் Digitisation செய்யவும், காகித வடிவில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவுருக்கள் நுண்ணிய படம் பிடித்து மின்னணு மயம் ஆக்குவது குறித்து செயல்படுத்துவதற்காகவும் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 பொதுமக்கள் இணையதளம் மூலம் சொத்து தொடர்பான வில்லங்கங்களைப் பார்த்துக் கொள்ளும் வசதி 6.11.2013 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 பொது மக்கள் இணைய தளம் மூலம் சார்பதிவாளருடன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆவணப் பதிவு செய்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ளும் வசதி 6.11.2013 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 3 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளடங்கிய ஒரு ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகங்கள் மற்றும் 19 தனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
 ஒரு சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 4 ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகங்கள் மற்றும் 24 தனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
5. நிதித் துறை:-
 அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் 2,000/- ரூபாயிலிருந்து 5,000/- ரூபாயாக உயர்த்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 25 ஆண்டு காலம் அப்பழுக்கற்ற பணியினை முடித்த அரசு ஊழியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி, மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டதும், அதே அளவு உயர்த்தி உடனுக்குடன் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
6. உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை:-
 காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் 2673 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, சீருடைப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளன. அரியலூர், கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் தலா 10 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கோட்டையூர், தருமபுரி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, கடலூர், நாமக்கல், சேலம், தேனி, மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களிலும் நிலம் தேர்வு செய்யப்பட்டு நில மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 காவல் படைக்கு உதவுவதற்கு தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை ஒன்று உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இப்படையில் ஓராண்டு  பணி நிறைவு செய்த 8500 பேர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் பொதுத் தேர்வு மூலம் இரண்டாம் நிலை காவலராக, தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் (Tamil Nadu Special Police Battalion) பணி நியமனம் செய்யப்பட்டு, தற்போது காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
  “காவல் துறையினருக்காக ஏற்படுத்தப்பட்ட பல்பொருள் அங்காடிகள்”(Canteens) மூலம் பொருட்களை குறைந்த விலையில் பெறும் வசதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பணிபுரியும் 6,800 அலுவலர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில்  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.
 பாரம்பரிய நீதிமன்றக் கட்டடங்களான ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், சைதாப்பேட்டை நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம் (பிரதான கட்டடம்), எழும்பூர் நீதிமன்றம் (ஓடு வேயப்பட்டுள்ள கட்டடம்), சிறுவழக்குகள் நீதிமன்ற கட்டடங்கள் புதுப்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்கள் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
 நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 சார்நிலை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண லால்குடி, கீரனூர், ஓமலூர், பரமத்தி, ஆண்டிப்பட்டி, மணப்பாறை, அருப்புக்கோட்டை மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் தலா ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், மதுரையில் மூன்று கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களும், கோயம்புத்தூரில் இரண்டு கூடுதல் மாவட்ட உரிமையியல்  நீதிமன்றங்களும், வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி, ஓமலூர், கீரனூர், கும்பகோணம், பெரம்பலூர், தாம்பரம், ஆலந்தூர் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் தலா ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றமும் என மொத்தம் 22 நீதிமன்றங்கள் அமைப்பதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டு, நீதிமன்றங்களை அமைப்பதற்கான பணிகள் சென்னை உயர்நீதிமன்றம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலும் மாவட்ட நீதிபதி பதவித் தரத்தில், இரு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.  தேனி, ஆரணி, நாகர்கோயில், விழுப்புரம், பழனி, மேட்டூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட நீதிபதி பதவித் தரத்தில்,  8 விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான பணிகள் சென்னை உயர்நீதிமன்றம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
 வேலூரில் புதிய துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் அமைக்கப்பட்டு, 19.2.2014 முதல் இயங்கி வருகிறது.
 சோழிங்கநல்லூர், அம்பத்தூர், வாணியம்பாடி, மயிலாடுதுறை மற்றும் ஸ்ரீவில்லிப்புத்துhர் ஆகிய இடங்களில் இயங்கி வந்த மோட்டார் வாகன பகுதி அலுவலகங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தப்பட்டு, 19.2.2014 முதல்  இயங்கி வருகின்றன.
 குன்றத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் கோயம்புத்துhர் ஆகிய இடங்களில் கூடுதலாக புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு, 19.2.2014 முதல் இயங்கி வருகின்றன.
 கும்மிடிப்பூண்டி, பண்ருட்டி, செஞ்சி, ஆம்பூர், இலுப்பூர், திருத்துறைப்பூண்டி, லால்குடி, அரவக்குறிச்சி மற்றும் வால்பாறை ஆகிய 9 இடங்களில் மோட்டார் வாகன பகுதி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.
 14 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத் தளங்கள் அமைப்பது தொடர்பான பணிகள் பொதுப் பணித் துறையினரால் முடிக்கப்பட்டு போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  கணினிமயமாக்கும் பணிகளைப் பொறுத்தமட்டில் ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யும் நாள் 28.6.2016 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 சிதம்பரம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் இயங்கி வந்த மோட்டார் வாகன பகுதி அலுவலகங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தப்பட்டு, 18.6.2015 முதல் இயங்கி வருகின்றன.
 மண்மங்கலம், உசிலம்பட்டி, திருத்தணி மற்றும் செய்யார் ஆகிய இடங்களில் புதிய மோட்டார் வாகன பகுதி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு, 18.6.2015 முதல் இயங்கி வருகின்றன.
 நத்தம், ஆலங்குடி மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் புதிய மோட்டார் வாகன பகுதி அலுவலகங்கள் உருவாக்கப்படுவதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
 ஸ்ரீபெரும்புதூர், மேட்டூர், பழனி, சிவகாசி மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மோட்டார் வாகன பகுதி அலுவலகங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக  நிலை உயர்த்தப்பட்டு, இயங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன.
 கோயம்புத்தூர் மத்திய சிறையில் ஏற்கெனவே உள்ள பெண்கள் இணைப்புச் சிறை, பெண்கள் தனிச் சிறையாக தரம் உயர்த்தப்பட்டு 28.4.2016 முதல் இயங்கி வருகிறது. மதுரையில் பெண்கள் தனிச் சிறை 4.3.2016 முதல் இயங்கி வருகிறது.
 பெண்கள் இணைப்புச் சிறையுடன் திருப்பூர் மாவட்ட சிறை அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விழுப்புரம்  மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பார்ஸ்டல் பள்ளி  இணைப்புடன் கூடிய  மாவட்ட சிறை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 அனைத்து மத்திய சிறைகள் (மத்திய சிறை வளாகம், புழல் தவிர), பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் மேற்கூரை சூரிய  ஒளி உற்பத்தி முறை (Roof Top Solar Photo Voltic Method) அமைத்திட ஆணையிடப்பட்டு பணிகள் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 பாளையங்கோட்டை மற்றும் வேலூர் மத்திய சிறைகளில் நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
 தேனி மாவட்டத்தில் 200 சிறைவாசிகள் தங்கும் வகையில் பார்ஸ்டல் பள்ளி உள்ளடக்கிய ஒரு மாவட்டச்சிறை அமைத்திட அடித்தளப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 புழல் மத்திய சிறை வளாகத்தில் 30 குடியிருப்புகள், வேலூர் மத்திய சிறை வளாகத்தில் 30 குடியிருப்புகள், கடலூர் மத்திய சிறை வளாகத்தில் 20 குடியிருப்புகள், கோவை மத்திய சிறை வளாகத்தில்  20 குடியிருப்புகள் என மொத்தம் 100 குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் தனிச் சிறைகள், ஒரு பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறை ஆகியவற்றில் உள்ள 13 மருத்துவமனைகள் மற்றும் 30 அவசர கால ஊர்திகளுக்கு 2 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் (OXYGEN) புளோ மீட்டர், டிராலி, மல்டிசேனல் மானிட்டர், (Multi – Channel Monitor), வென்டிலேட்டர் முதலிய 13 வகையான உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்கி வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 புழல், பாளையங்கோட்டை மற்றும் கோவை மத்திய சிறை வளாகங்களில் தலா 30 குடியிருப்புகள்; புதுக்கோட்டை, பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறை வளாகத்தில் 10 குடியிருப்புகள் என மொத்தம் 100 குடியிருப்புகள் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது.
7. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை:-
 சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையிலுள்ள திருமழிசையில், 2,160 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 12,000 அடுக்குமாடி குடியிருப்புகளுடன் கூடிய துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான பணிகள் நடைப்பெற்று  வருகின்றன.
 சென்னை அசோக்பில்லர் அருகில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான மரவேலை பிரிவில் (Wood Working Unit) காலியாக உள்ள 3.73 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.
 சென்னை கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு கிராமத்தில் 5.6 ஏக்கர் நிலபரப்பில் பன்னடுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்குண்டான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.
 குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளை நன்முறையில் பராமரிப்பதற்கு நிதி ஆதாரம் ஏற்படுத்தும் பொருட்டு நந்தனம் பகுதியில் 17 அடுக்கு, அலுவலக வளாகம் வாரிய நிதியிலிருந்தே அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.
 குடிசைப் பகுதி மாற்று வாரிய ஒதுக்கீடுகளில், மாற்றுத் திறனாளிகளுக்கான 1 சதவீத ஒதுக்கீடு  3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை   56 மாற்றுத் திறனாளிகளுக்கு வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 மதுரை திருநெல்வேலி நான்கு வழிப் பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில், ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான பணிகளின் ஒப்பந்தப்புள்ளி முடிவுசெய்யப்பட்டு திட்டம் முன்னேற்றத்தில்  உள்ளது.                                              
 சோழிங்கநல்லூர் பகுதியில், தற்போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் உள்ள நிலத்தில், முன்கட்டுமான தொழில் நுட்பம், (pre-fab technology) என்ற நவீன   தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டுவதற்கான பணிகளின் ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யப்பட்டு திட்டம் முன்னேற்றத்தில்  உள்ளது.
 சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில்  32 மனைகள், 1,630 தனி வீடுகள் மற்றும்                      2,792 அடுக்குமாடி குடியிருப்புகள், சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டுவதற்கான பணிகளின் ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யப்பட்டு திட்டம் முன்னேற்றத்தில்  உள்ளது.
 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கிரையப் பத்திரம் வழங்கப்படாமல் இருந்த 45,939 ஒதுக்கீட்டாளர்கள் பயன் பெறும் வகையில், வட்டிச் சலுகைத் திட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, 14,992 ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் ஒதுக்கீடுதாரர்கள் 50.94 கோடி ரூபாய் அளவிற்குப் பயனடைந்துள்ளனர்.
 கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 31.3.2013 வரை வழங்கப்பட்ட வட்டி சலுகைத் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு வட்டித் தள்ளுபடி சலுகையாக 34.28 கோடி ரூபாயும், அபராத வட்டி முழுத் தள்ளுபடியாக 59.74 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 94.02 கோடி ரூபாய் அளவிற்கு 13,297 உறுப்பினர்கள் வட்டித் தள்ளுபடி சலுகையாகப் பயன் பெற்றுள்ளார்கள்.
 தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் முதற்கட்டமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மிகவும் பழுதடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குப் பதிலாக புதியதாக 1,808 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
 கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக வண்டலூரில் புதிய பேருந்து முனையம் அமைக்கத் தேவையான மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
 திருச்சி மாவட்டம் நாவல்பட்டில், திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலை இணையும் பகுதியில் அமைந்துள்ள 68.82 ஏக்கர் நிலப்பரப்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய 1,360 பல்வேறு வகை மனைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யப்பட்டு திட்டம் முன்னேற்றத்தில்  உள்ளது.
 10 புராதன நகரங்களை பேணிப் பாதுகாத்திட, உள்ளாட்சிகள்/அரசுத் துறைகளுக்கு நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
 கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அடுக்குமாடி அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான பணிகளின் ஒப்பந்தப் புள்ளி முடிவுசெய்யப்பட்டு திட்டம் முன்னேற்றத்தில்  உள்ளது.
 சென்னை காமராஜர் சாலை காந்தி சிலை அருகில் மற்றும் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை ஆகிய 2 இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணியினை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகின்றது.
 வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தின் மேல் 1 லட்சத்து 11 ஆயிரம் சதுர அடி பரப்பில் இரண்டு தளம் கொண்ட வளாகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கு திட்ட வடிவமைப்பு மற்றும் உத்தேச மதிப்பீடு தயாரிக்க கட்டட வடிவமைப்பாளர் (Architect) தெரிவு செய்யும் பணி முன்னேற்றத்தில் உள்ளது.                                                             
 நகர குடிசைப்பகுதி வாழ் குடும்பங்களுக்கான 10,002 குடியிருப்புகள் / வீடுகள் 550.28 கோடி ரூபாய் செலவில் கட்டும் திட்ட செயற்குறிப்பிற்கு மாநில அளவிலான ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு மற்றும் மைய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் ஒப்புதல் பெறப்பட்டு திட்டம் முன்னேற்றத்தில் உள்ளது.
 தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் சென்னை, நொச்சிக்குப்பம் பகுதியில் பழுதடைந்த 536 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதிதாக குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
 சென்னையில் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வாங்கக் கூடிய 20 லட்சம் ரூபாய்க்கு குறைவான விலையில் சென்னை அம்பத்தூரில் அனைத்து வசதிகளுடன் இரு படுக்கை அறைகளுடன் கூடிய 2,394 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டுவதற்கான திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு  முன்னேற்றத்தில் உள்ளது.
 அரசு அலுவலர்களுக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் “சி” மற்றும் “டி” பிரிவு  அரசு அலுவலர்களுக்கு சென்னை பாடிகுப்பம் மற்றும் வில்லிவாக்கம் பகுதியில்  500 பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டுவதற்கான பணிகளின் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்காக 2,800 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டப் பணிகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தாத மின்சக்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, அனைத்து தொகுப்பு வளர்ச்சிகள் மற்றும் பலமாடிக் கட்டடங்களில் சூரிய மின் சக்தியினைப் பெறுவதற்கான அமைப்பினை ஏற்படுத்துவது சட்டப்படி அவசியமாக்க வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.                                        
 தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 12,649 குடியிருப்புகள் / வீடுகள் கட்டும் திட்ட செயற்குறிப்பிற்கு மாநில அளவிலான ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு மற்றும் மைய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு மாநில முழுவதிலும் உள்ள 1.55 இலட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளை, பழுது பார்த்து பராமரித்திட ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு திட்டம் முன்னேற்றத்தில் உள்ளது.
 மதுரைக்கு அருகே தோப்பூர்-உச்சப்பட்டி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அமைக்கப்படும் துணை நகரத்தில் 4,500 பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான அலகுகள், மதுரை நகரத்தின் ஆட்சேபகரமான புறம்போக்குகளில் வசிக்கும் குடிசைப்பகுதியினருக்கு ஒதுக்கீடு செய்து, அந்த இடத்தில் பயனாளிகள் தாமே வீடுகள் கட்டிக் கொள்வதற்கு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் உதவி செய்யும் திட்டம் முன்னேற்றத்தில் உள்ளது.                                                                    
 சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தை ஒட்டியுள்ள பகுதியில் மூன்று புறநகர் ரயில் பாதைகள், ஒரு பெருந்திரள் துரித ரயில் பாதை, தொலைதுhர ரயில் பாதை மற்றும் தற்போது கட்டுமானத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் கழகத்தின் பாதைகள் ஆகியவைகள் கூடும் இடமாக சென்னை சென்ட்ரல் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் திகழ்வதால், அப்பகுதியில் சுமார் ரூ.400 கோடி செலவில் மத்திய சதுக்கம் அமைப்பதற்கான பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
 எண்ணுhர் துறைமுகத்தில் நுழைகிற மற்றும் வெளியேறுகிற சரக்குந்து வாகனங்களினால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அனைத்து உள்கட்டமைப்பு  வசதிகளுடன் கூடிய சரக்குந்து  வாகனம் நிறுத்துமிடம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு,   விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது.
8. தொழில் துறை:-
 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில், ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் ஊதியம் பெற்று வரும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளன.
 கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூரில் 2,740 ஏக்கர் பரப்பளவில் புதிய தயாரிப்பு மண்டலம் (New Manufacturing Zone) நிறுவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு நில எடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
 திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி தாலுகாவில் உள்ள காட்டூர் மற்றும் எப்ரஹாம்புரம் கிராமங்களில் உள்ள சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் கனரக இயந்திர உற்பத்தி மையம் ஒன்றை அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 “தொழில் கட்டமைப்பு தொகுப்பு நிதி” (Industrial Infrastructure Consolidated
Fund) ஒன்று ஏற்படுத்தப்பட்டு, சிப்காட் வளாகங்களில் உள்ள தொழில் பூங்காக்களில் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
 தமிழ்நாட்டில் முதன்முதலாக உலக முதலீட்டாளர் மாநாடு சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது.  இதில் 2,42,160 கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன.  இதில் 45 நிறுவனங்கள் மூலம் 22,595 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு பலர் வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனர். மற்ற நிறுவனங்கள் நிலம் கையகப்படுத்துவது, நிதி ஆதாரங்களைப் பெறுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  விரைவிலேயே இவைகளும் தங்கள் தொழில்களை நிறுவ நடவடிக்கைகளை எடுத்து விடும்.
 இந்த முதலீட்டாளர்கள்  மாநாடு நடைபெறுவதற்கு முன்பே, 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 31,706 கோடி ரூபாய் முதலீடுக்கு வகை செய்யயப்பட்டுள்ளது.  வழி காட்டும் மையம் மூலம் 57 திட்டங்களில், 12,233 கோடி ரூபாய் ஈர்க்கப்பட்டுள்ளது.   
 தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் மூலம் காகித அட்டை தயாரிக்கும் ஒரு புதிய ஆலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொண்டிப்பட்டி வருவாய் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள வறட்சியான பகுதியில் 1,650 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 874 ஏக்கர் நிலப்பரப்பில் தொடங்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை முடுக்கிவிடும் பொருட்டு சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், தொழில் பூங்காக்கள், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) மூலம் அமைக்கப்படும் பணி தொடங்கப்பட்டு, நில எடுப்பு பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன.
 கோயம்புத்தூர், அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் ரூபாய் 55 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு உயிரி தொழில் பூங்கா III-யினை நிறுவிட கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
 டிட்கோ நிறுவனம், எச்.எல்.எல். லைப்கேர் லிமிடெட் என்னும் ஒரு இந்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து மருத்துவப் பூங்கா ஒன்றினை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மற்றும் திருவாடானை வட்டங்களில் தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம், அதாவது National Investment and
Manufacturing Zone சுமார் 6,525 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் அமைத்திட, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட உள்ளன.
 ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், வாலிநோக்கம் உப்பள வளாகத்தில் 500 ஏக்கர் அரசு நிலத்தில் 50 மெகாவாட் மின் திறன் கொண்ட சூரிய வெப்ப சலன மின் உற்பத்தியுடன் கூடிய 15 mld கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிட்கோ மற்றும் G.M.R. நிறுவனம் மூலம் 100 ஏக்கர் நிலப்பரப்பில் மின்னணுவியல் உற்பத்தி வளாகத் திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 சிப்காட் நிறுவனத்தின் வெவ்வேறு தொழில் வளாகங்கள் / பூங்காக்களில் சாலைகள், தண்ணீர் வசதி, தெரு விளக்குகள், கழிவுநீர் அகற்று வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 121.07 கோடி ரூபாய் செலவில், செய்து முடிக்கப்பட்டுள்ளன.
 12 மாவட்டங்களில் உள்ள 20 தொழில் வளாகங்கள் / பூங்காக்களில் 5 கோடி ரூபாய் செலவில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
 மூன்று சிப்காட் தொழிற் வளாகங்கள் / பூங்காக்களில் உள்ள கழிவுநீர் குட்டைகளை, புனரமைப்பு செய்து, மழைநீர் சேமிப்பு குட்டைகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
 தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சிமெண்ட் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, 50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட ஆலை துவக்கி நிறுவப்பட்டுள்ளது.
 கரூர் மாவட்டம், மாயனூரில், மதிப்புக் கூட்டிய காகிதம் மற்றும் காகித அட்டை தயாரிக்கக் கூடிய சிறு தொழில் புரியும்  நிறுவனங்களுக்கான மையம் (Center for
Conversion of Paper and Packaging Board Unit) தொடங்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்,  மென்பொருள்  தொழில் நுட்பப் பிரிவின் (Information Technology Section) சேவை மையத்தின் ளுநசஎநச திறன்  மேம்படுத்தப்பட்டுள்ளது.
 கள்ளக்குறிச்சி-IIமற்றும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 45 KLPD வடிப்பகத்துடன் கூடிய எத்தனால் ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 அமராவதி மற்றும் சேலம் கூட்டுறவு  சர்க்கரை ஆலைகளில் ஈரடுக்கு எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 ஆறு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் 2 கூட்டுறவு வடிப்பாலைகளில் காற்று மற்றும் நீரில் உள்ள மாசு விவரங்களை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று கவனிப்பு அலகுடன் இணைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்காக புதிய காற்றழுத்தி இயந்திரங்கள், புதிய  மண்வாரி இயந்திரங்கள் மற்றும்  புதிய சுரங்க டிப்பர்கள், வாங்கப்பட்டு  பயன்பாட்டில் உள்ளன.
 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா (Integrated Textile
Processing Park) ஒன்று அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவக்கிட தமிழ்நாடு உப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
 கோயம்புத்துhரில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள டைடல் பார்க் கோயம்புத்துhர் லிமிடெட் நிறுவனத்தில், சிறிய மற்றும் நடுத்தர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உடனடியாக தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அபிவிருத்தி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  300 சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இது  விரைவில் செயல்படத் துவங்கும்.
 மாநிலத்தில் உள்ள வானுhர்தி உற்பத்தி சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் வட்டம், வல்லம்-வடகால் கிராமங்களில்,  தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் சுமார் 350 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையம் ஒன்றினை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 பொன்னேரி தொழிற்மைய திட்டத்தை தேசிய முதலீட்டு மற்றும் உற்பத்தி மண்டலமாக (NIMZ) அறிவிக்க கோரிய தமிழக அரசின் கருத்துருவிற்கு மத்திய அரசின் தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையானது (DIPP) ஒப்புதல் அளித்துள்ளது. பெருந்திட்ட தயாரிப்பு (Master Plan) டில்லி, மும்பை தொழில் வளாக  மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
 உயிரி தொழில்நுட்ப மூலதன முதலீட்டு நிதி (Bio-Technology Capital Fund) Tamil Nadu Infrastructure Fund Management Corporation மூலம் செயல்படுத்த, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், 50 லட்சம் ரூபாய்  முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக  மையத்தில் கூடுதலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 டிரான்ஸ்போர்ட் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா (Transport Corporation of India) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான டிசிஐ டிஸ்ட்ரிபூஷன் சென்டர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம்,   சரக்காளுமை பூங்கா (Logistics Park) ஒன்றினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பெரும்புதுhர் மற்றும் அதனை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உளுந்தை கிராமம் ஆகிய பகுதிகளில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
 திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை 37.19 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தொடர் நடவடிக்கையில் உள்ளது.
 நடிப்பிசைப் புலவர்  கே.ஆர். இராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை 56 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு, தொடர் நடவடிக்கையில் உள்ளது.
 அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 25.80 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு,  தொடர் நடவடிக்கையில் உள்ளது.
9. நெடுஞ்சாலைகள் மற்றும்  சிறு துறைமுகங்கள் துறை:-
 தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் வரையில் உள்ள 113 கி.மீ சாலை, இருவழிப்பாதையாக அகலப்படுத்தி, மேம்பாடு செய்யும் பணிகளில் 6 தொகுப்புகளில் சாலைப் பணி நடைபெற்று வருகிறது. இரு தொகுப்புகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று  வருகின்றன. 
 சேலம் மாவட்டம் எடப்பாடி நகரில், 8.60 கி.மீ. நீளத்திற்கான புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று  வருகின்றன.  சிவகங்கை நகரில், 10.60 கி.மீ. நீள புறவழிச் சாலை அமைக்க 5 கிராமங்களில் தேவையான நில எடுப்பு பணிகள் நடைபெற்று  வருகின்றன.
 ரயில்வே பணித் திட்டம் 2011-12ன் கீழ் 9 மாவட்டங்களில் 23 ரயில்வே மேம்பாலங்கள்/ கீழ்பாலங்கள் அமைப்பதற்கு  ஆணைகள் வெளியிடப்பட்டன. அவற்றின் விபரங்கள்:-
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 பணிகளில் கடவு எண்.59  மற்றும் 75-க்கு  மதிப்பீடு தயார் நிலையில் உள்ளது.   இப்பணிகள் நில எடுப்பு முடிவுற்றவுடன் துவங்கப்படும். கடவு எண்.64 மற்றும் 29-க்கு  விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
 திருவள்ளுர் மாவட்டத்தில் 2 பணிகளில் கடவு எண்.13க்கு மதிப்பீடு தயார் நிலையில் உள்ளது.    கடவு எண்.16க்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.  இப்பணிகள் நிலஎடுப்பு முடிவுற்றவுடன் துவங்கப்படும்.
 வேலூர் மாவட்டத்தில் 4 பணிகளில் கடவு எண்.80, 78 மற்றும் 126 & 127-க்கு  தற்சமயம் பணி துவங்கப்பட்டு நடைபெறுகிறது. இப்பணிகள் பிப்ரவரி 2018ல் முடிக்கப்படும்.   கடவு எண்.70 க்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
 விழுப்புரம் மாவட்டத்தில் 3 பணிகளில் கடவு எண்.111 மற்றும் 102-ல் பணி நடைபெற்று வருகிறது.    இப்பணிகள் ஜீலை 2016ல் முடிக்கப்படும்.  கடவு எண்.88க்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
 கோயம்புத்துhர் மாவட்டத்தில் 4 பணிகளில் கடவு எண்.3-ல் (பொள்ளாச்சி) பணி முடிக்கப்பட்டு 13.11.2015ல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு  திறந்து வைக்கப்பட்டது.  கடவு எண்.10ல் பணி நடைபெற்று வருகிறது.  இப்பணி டிசம்பர் 2016ல் முடிக்கப்படும்.  கடவு எண். 162ல் பணி நடைபெற்று வருகிறது.  இப்பணி ஜனவரி 2018ல் முடிக்கப்படும்.  கடவு எண்.3க்கு (இருகூர்) பொது நேர்பாடு வரைபட நிலையில் உள்ளது. 
 சேலம் மாவட்டத்தில் 3 பணிகளில் கடவு எண்.187 பணி நடைபெற்று வருகிறது.  இப்பணி ஜீன் 2016ல் முடிக்கப்படும்.  கடவு எண்.183 மற்றும் 184 மதிப்பீடு தயார் நிலையில் உள்ளது.  நிலஎடுப்பு முடிவுற்றவுடன் பணி துவங்கப்படும்.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் கடவு எண்.473 பணி நடைபெற்று வருகிறது.   இப்பணி விரைவில்  முடிக்கப்படும். 
 திண்டுக்கல் மாவட்டத்தில் கடவு எண்.2, 27 & 308 தற்சமயம் பணி துவங்கப்பட்டு  நடைபெறுகிறது.  இப்பணி  பிப்ரவரி 2018ல் முடிக்கப்படும்.
 திருநெல்வேலி மாவட்டத்தில் கடவு எண்.118 ஏ பணி நடைபெற்று வருகிறது.  இப்பணி ஜுன் 2016ல் முடிக்கப்படும்.
 18 மாவட்டங்களில் 151 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட 65 பாலப் பணிகளில் ஜனவரி 2016 வரை 61 பாலப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.    நாமக்கல் (காவிரி ஆற்றின் குறுக்கே பள்ளிபாளையம் பகுதியில் பாலம்)  மற்றும்  கடலூர்  ( கெடிலம் ஆற்றின் குறுக்கே திருமாணிக்குழி  பாலம்)  பாலப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.  அவற்றில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பணியானது மே 2016-லும்,  நாமக்கல் மாவட்டத்திலுள்ள பணியானது ஜூன் 2016-லும் முடிவுறும். 
 சோதனை முறையில், சென்னையில் உள்ள அண்ணா சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை மற்றும் உள்வட்டச் சாலைகளை முழுமையாக, ஒருங்கிணைந்த முறையில் சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்த பணிகள்  மேற்கொள்ளப்பட்டன.  56.98 கோடி ரூபாய்  மதிப்பில் சாலைகளை மேம்பாடு செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது.  4.54 கோடி ரூபாய் மதிப்பில் சாலை சமிஞ்சைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே திருச்சி மாநகரத்தையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த பாலம் தற்போது மிகவும் பழுதடைந்துள்ளதால்,  அங்கு புதிய நான்கு வழிப் பாலம் அமைக்கும் பணியும், அணுகு சாலையில் அய்யன் வாய்க்கால் குறுக்கே ஒரு சிறு பாலம் அமைக்கும் பணியும், மற்றும் சாலை சந்திப்பு மேம்பாடு போன்ற அனைத்து பணிகளும் 77.45கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 கரூர் மாவட்டத்தில் பசுபதிபாளையம் அருகில் கரூர்-வாங்கல் சாலையையும், நாகப்பட்டினம்-கூடலுர்-மைசூர் சாலையையும் இணைக்கும் தரைவழிப்பாலம் பழுதடைந்துள்ளதால், அங்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்மட்டப் பாலம் ஒன்று அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இது  விரைவில் நிறைவு பெறும்.
 மாமல்லபுரத்தையும், எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கும் வகையில், 1,420 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 162 கிலோ மீட்டர் நீளமுடைய புதிய வழித்தடம் சிங்கப்பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவயல் ஆகிய ஊர்களின் வழியாக காட்டுப்பள்ளி வரை சென்னை எல்லை சாலை, அதாவது Chennai Peripheral Road பணிக்கான திட்ட அறிக்கை  தயாரிக்கும் பணி முடிவுற்றது.  நிலத் திட்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் சேவை குழாய்களை குறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இப்பணியை ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்த கருத்துரு மைய அரசுக்கு அனுப்பப்பட்டு மைய அரசின் பரிசீலனையில் உள்ளது.
 மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய நகரங்களுக்கு வட்ட /  ஆரச் சாலைகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 திருப்பூர் நகரத்திற்கு  98.6 கி.மீ. நீளத்தில் வட்ட / ஆரச்சாலை அமைக்கும் பணிக்காக 70 கோடி  ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டு பணி முடிவடைந்துள்ளது.
 திருநெல்வேலி மற்றும்  துhத்துக்குடி  மாவட்டங்களில்  வட்ட /ஆரச் சாலை அமைப்பதற்கான  விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
 ஈரோடு  மாவட்டத்தில் 7.2 கி.மீ. நீள வட்டச் சாலை அமைக்கும் பணி 76.20 கோடி ரூபாய் மதிப்பில் மூன்றாம் கட்டமாக மேற்கொள்ள 69.30 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டு பணிகள்  நடைபெற்று வருகின்றன.
 30 நகரங்களில் அதாவது, திருவண்ணாமலையில் 10.9 கிலோ மீட்டர் நீளத்தில் 23.86 கோடி  ரூபாய் மதிப்பிலும்,  விருத்தாச்சலத்தில் 9.2 கி.மீ. நீளத்தில் 19.92 கோடி  ரூபாய் மதிப்பிலும்,   சிதம்பரத்தில் 16.23 கி.மீ. நீளத்தில் 37 கோடி ரூபாய்  மதிப்பிலும்,  நாகப்பட்டினத்தில் 9 கி.மீ. நீளத்தில் 19.49 கோடி ரூபாய் மதிப்பிலும், முத்துப்பேட்டையில்  4.90 கி.மீ. நீளத்தில் 10.51 கோடி ரூபாய்  மதிப்பிலும்,   சீர்காழியில் 8.80 கி.மீ. நீளத்தில் 19.18 கோடி ரூபாய்  மதிப்பிலும், திருத்துறைப்பூண்டியில் 3.70 கி.மீ. நீளத்தில் 6.80 கோடி ரூபாய் மதிப்பிலும்,   ஆரணியில் 5.30 கி.மீ நீளத்தில் 11.61 கோடி ரூபாய் மதிப்பிலும்,  போளூரில் 4.90 கி.மீ. நீளத்தில் 10.72 கோடி ரூபாய் மதிப்பிலும்,   திருக்கோயிலூரில் 4.40 கி.மீ நீளத்தில் 9.63 கோடி ரூபாய் மதிப்பிலும்,  அரியலூரில் 7.60 கி.மீ நீளத்தில் 16.63 கோடி ரூபாய் மதிப்பிலும்,  செய்யாறில் 3 கி.மீ நீளத்தில் 4.40 கோடி ரூபாய் மதிப்பிலும்,  வந்தவாசியில் 2.20 கி.மீ நீளத்தில் 3.50 கோடி ரூபாய் மதிப்பிலும், துறையூரில் 3.60 கி.மீ நீளத்தில் 9.45 கோடி ரூபாய் மதிப்பிலும்,  தாராபுரத்தில் 3.80 கி.மீ நீளத்தில் 18.50 கோடி ரூபாய்  மதிப்பிலும்,  பட்டுக்கோட்டையில் 4.20 கி.மீ நீளத்தில் 12.78 கோடி ரூபாய் மதிப்பிலும்,  எட்டுக்குடியில் 1.55 கி.மீ நீளத்தில் 1.55 கோடி ரூபாய் மதிப்பிலும்,  இளையான்குடியில் 2.60 கி.மீ நீளத்தில் 3.50 கோடி ரூபாய் மதிப்பிலும்,  பெரம்பலூரில் 9.06 கி.மீ நீளத்தில் 27.86 கோடி ரூபாய் மதிப்பிலும்,  ஓசூரில் 8.85 கி.மீ நீளத்தில் 18.99 கோடி ரூபாய் மதிப்பிலும்,  காஞ்சிபுரத்தில் 8.50 கி.மீ நீளத்தில்  37.05 கோடி ரூபாய் மதிப்பிலும்,  புதுச்சேரியில் 1.51 கி.மீ நீளத்தில் 13.29 கோடி ரூபாய் மதிப்பிலும்,  ஈரோட்டில் 7.60 கி.மீ நீளத்தில் 26   கோடி ரூபாய் மதிப்பிலும்,  ராமநாதபுரத்தில் 10.40 கி.மீ நீளத்தில் 37.03 கோடி ரூபாய் மதிப்பிலும்,  கும்பகோணத்தில் 4.10 கி.மீ நீளத்தில் 20.79  கோடி ரூபாய் மதிப்பிலும்,  ராசிபுரத்தில் 20.79 கோடி ரூபாய் மதிப்பிலும் என மொத்தம் 155.90 கி.மீ நீளமுள்ள புறவழிச் சாலைப் பணிகள் 420.04 கோடி ரூபாய்  மதிப்பில் முடிக்கப்பட்டு உள்ளன.  29 நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 19 நகராட்சி பகுதிகளில் புறவழிச் சாலைகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.\ தரமணி முதல் மாமல்லபுரம் வரை 45 கி.மீ நீளத்திற்கு உயர்மட்ட சாலை அமைத்திட, விரிவான திட்ட அறிக்கை, முதல் தொகுப்பான தரமணி முதல் சிறுசேரி வரை தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுசேரி முதல் மாமல்லபுரம் வரையிலான இரண்டாவது கட்டப் பணிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
 சென்னை – திருத்தணி – ரேணிகுண்டா சாலையில் 22 கி.மீ நீள இருவழித் தடத்தை நான்கு வழித் தடமாக மாற்றும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆறு வழிச் சாலையாக மேம்படுத்த நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 மப்பேட்டில் அமையவுள்ள உலர் துறைமுகத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை-4 வரை டிரக்குகள் எளிதில் செல்லும் வகையில் தண்டலம்-பேரம்பாக்கம் – தக்கோலம் – அருகில் பாடி சாலை, நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ளன.
 நாகப்பட்டினம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பெரம்பலூர் – மானாமதுரை மாநில நெடுஞ்சாலையில் மனக்கரம்பை வரை, தஞ்சாவூர் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றின் ஒரு பகுதியாக வெண்ணாற்றின் குறுக்கே ஒரு ஆற்றுப் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம் மற்றும் நந்தியம்பாக்கம் உட்பட 11 மாவட்டங்களில் 18 ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளில் 105 ஆற்றுப் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 22 பாலங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 சிறுசேரியில் 2,000 வாகனங்கள் மற்றும் 50 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்த உதவும் பல்லடுக்கு வாகன நிறுத்த கட்டடம் கட்டப்படுவது குறித்த “விரிவான சாத்தியக்கூறு அறிக்கை”  தயாரிக்கும் பணி முடிவுற்று, ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 பர்கூரில் உள்ள சிப்காட் தொழில் வளாகத்தினை அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.
 புதிதாக விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறையின் 250 கி.மீ. சாலைகளில் விளிம்பு வரை அகலப்படுத்தும் பணிகள், வடிகால் வசதியுடன் கூடிய நடைபாதைகள் அமைக்கும் பணிகள் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
 சென்னை பெருநகரில் மேடவாக்கம் மற்றும் கீழ்க்கட்டளையில் இரண்டு  பல்வழிச் சாலை மேம்பாலங்களும், தெற்கு உள்வட்டச் சாலையில் வாகன சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளும் செயலாக்கத்தில் உள்ளன.
 58 கோடி ரூபாய் மதிப்பில், பருத்திப்பட்டு, ராமாவரம் மற்றும் நொளம்பூர் அருகே மூன்று உயர் மட்ட பாலங்களும், 12 கோடி ரூபாய் மதிப்பில் தாம்பரம் ரயில்வே நிலையத்திற்கு அருகில் நகரும் படிகட்டுகளுடன் கூடிய ஒரு நடை மேம்பாலமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 மதுரை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்,  மதுரை வட்டச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் செயலாக்கத்தில் உள்ளன.
 சேலம் மாநகர் ஐந்து சாலைகள் சந்திப்பு அருகே உயர்மட்டப் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை – பெருநாழி – வாலிநோக்கம் சாலையில் 15.6 கி.மீ. நீள சாலை 29 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
 நாகப்பட்டினம் மாவட்டம்,வேதாரண்யம் நகரைச் சுற்றியுள்ள சாலைகளில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் சாலைகள் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 நாமக்கல் – திருச்செங்கோடு சாலை, நான்கு வழித் தடமாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 அரக்கோணம் சுரங்கப்பாதை அருகே சாலை மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, கொள்ளிடம் ஆற்றின் இடதுபுற கரை சாலை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்திரம்பூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாணியாற்றின் குறுக்கே என  4 உயர் மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 சேலம் நகரத்தில் திருவாக் கவுண்டனுhர் சந்திப்பில் ஒரு பல் வழிச் சாலை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
 கோயம்புத்துhர் நகரத்தில் நஞ்சுண்டாபுரம் சந்திப்பு மற்றும் ரயில் நிலையம் சந்திப்பில் இரண்டு நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலங்கள், கரூர் நகரத்தில் பேருந்து நிலையம் அருகே ஒரு நடை மேம்பாலமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 நகரங்களில் விபத்தைத் தடுக்கும் வண்ணம், அனைத்து சாலைப் பகுதிகளிலும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல், குறுகிய பாலங்களை அகலப்படுத்துதல், மையத் தடுப்பான்கள் அமைத்தல், போன்றவற்றிற்காக, 400 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியச்  சாலைகளில் 26 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 56 பாலங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை 5 ஆண்டுகளுக்கு மேம்படுத்தி, ஒருங்கிணைந்து பராமரிக்க 1,020 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு ஒப்பந்தம் செயலாக்கப்பட்டுள்ளது.
 திருவண்ணாமலை நகரில் கோயிலைச் சுற்றி அமையப் பெற்றுள்ள கிரிவலப் பாதையில், 7 மீட்டர் முதல் 10 மீட்டர் அகலமுள்ள நடைபாதை வடிகால் வசதிகள் மற்றும் ஓய்வு அறை வசதிகளுக்காக 65 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று  வருகின்றன.
 விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறையின் சாலைகளில், விளிம்பு வரை அகலப்படுத்தும் பணிகளை உள்ளடக்கிய, நடைபாதை ஒருங்கிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டு, 2015-2016-ல் இரண்டாம் கட்டமாக 150 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று  வருகின்றன.
 ரயில்வே கடவுகளுக்கு பதிலாக மேம்பாலங்கள் மற்றும் கீழ் பாலங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 12 பணிகள் சேலம், வேலூர், கோயம்புத்துhர், கடலூர், மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெற்று  வருகின்றன.
 திருவள்ளூர் கோட்டத்தில் 485 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலைகளும், 278 கி.மீ நீள மாவட்ட முக்கிய சாலைகளும், 680 கோடி ரூபாய் மதிப்பில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள பணிகள் நடைபெற்று  வருகின்றன.
 ஓரகடம் தொழிற்பூங்கா பகுதியில், சிங்க பெருமாள் கோயில் முதல் ஒரகடம் வரை ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்தும்  பணிகள் மற்றும் வண்டலூர் முதல் ஒரகடம் வரையிலான நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணிகள் மற்றும் படப்பை புறவழிச் சாலைக்கு நில எடுப்புப் பணிகள் நடைபெற்று  வருகின்றன.
 பெரிய தெற்கத்தியச் சாலையில் வண்டலூர் – மாம்பாக்கம் – கேளம்பாக்கம் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக ஒரு மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
 சென்னை பெருநகர பகுதிகளில், உள்வட்ட சாலையில் கொளத்தூர் பகுதியில் இரட்டை ஏரி அருகில் பெரம்பூர்-செங்குன்றம்  சாலை சந்திப்பில் இரண்டாம் கட்டமாக, வலது புறச் சாலையில் மேம்பாலப் பணி 35 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படுவது குறித்த பணிக்கான நிர்வாக ஒப்புதல் அரசால் வழங்கப்பட்டு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது