காஞ்சிபுரம் மத்திய மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் நீக்கம் : புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் நீக்கம் : புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

புதன், செப்டம்பர் 07,2016,

விருகம்பாக்கம் ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் கே.விஜயன், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து,நேற்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:-       தென் சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் பகுதி ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் கே.விஜயன், அதிமுக உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சியின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் அவர் நீக்கப்படுகிறார்.

கட்சியினர் யாரும் அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தனது அறிவிப்பில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தின் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, விவசாயப் பிரிவு ஆகியவற்றின் நிர்வாகிகளாகக் கீழ்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு  நியமிக்கப்படுகிறார்கள்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம்\காஞ்சிபுரம் மத்திய மாவட்டப் பொருளாளர் பி.விஜயபாஸ்கர் (நீர்பெயர் கிராமம், மதுராந்தகம் ஒன்றியம்),எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள்மாவட்ட இணைச் செயலாளர் செய்யூர் எஸ். இளங்கோ (செய்யூர் ஊராட்சி மன்றத் தலைவர், லத்தூர் ஒன்றியம்), எம்.இஸ்மாயில் (விளம்பூர் கிராமம், சித்தாமூர் ஒன்றியம்),வி.ஆதிநாராயணன் (வேடந்தாங்கல் கிராமம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்)

விவசாயப்பிரிவு\மாவட்டச் செயலாளர் டி.கே. விநாயகம் (தென்பட்டினம் கிராமம், லத்தூர் ஒன்றியம்)ஒன்றியச் செயலாளர் எஸ். கவுஸ் பாஷா (சிங்கப்பெருமாள் கோயில்), ஒன்றிய துணைச் செயலாளர் வ.பா. மாரிமுத்து (பெரிய விஞ்ஞியம்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோயில்)

திருப்போரூர் ஒன்றியக் கழகம்ஒன்றியச் செயலாளர் தையூர் எஸ்.குமரவேல் (தையூர் ஊராட்சி மன்றத் தலைவர்),எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் எம்.ஆனந்தன் ( தண்டலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்)திருக்கழுக்குன்றம் அவைத் தலைவர் வி.ரகுராமன் (பெரியகாட்டுப்பாக்கம் கிராமம், வீராபுரம்), ஒன்றியச் செயலாளர் ஏ.விஜயரங்கன் (வெங்கப்பாக்கம் கிராமம், கல்பாக்கம்) ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றம்ஒன்றியச் செயலாளர் ஜி.கே.பாபு (முள்ளிக்கொளத்தூர்), திருக்கழுக்குன்றம் பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பேரூராட்சி செயலாளர் ஜெ.சுரேஷ்.ஆகியோருக்கு அ. தி.மு.க. உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.