காலை இழந்த பெண்ணுக்கு 5 தையல் இயந்திரங்களையும், 25 ஆயிரம் ரூபாயையும் வழங்கி முதல்வர் ஜெயலலிதா ஆறுதல்

காலை இழந்த பெண்ணுக்கு 5 தையல் இயந்திரங்களையும், 25 ஆயிரம் ரூபாயையும் வழங்கி முதல்வர் ஜெயலலிதா ஆறுதல்

வெள்ளி, ஜூன் 10,2016,

காலை இழந்த திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த திருமதி முத்துலட்சுமி என்பவருக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா,உரிய மருத்துவ சிகிச்சை அளித்து செயற்கைக் கால் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்ததோடு, டெய்லர் கடை வைத்து தனது வாழ்க்கையை நடத்துவதற்கு 5 தையல் இயந்திரங்களையும், 25 ஆயிரம் ரூபாயையும் “புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்”-டின் சார்பில் வழங்கி ஆறுதல் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், அரசூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்த நிலையில், அரசூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேர் திருவிழாவின் போது கூட்ட நெரிசல் காரணமாக திருமதி முத்துலட்சுமியின் வலது கால் தேர் சக்கரத்தில் சிக்கி, தனது வலது காலை இழந்துவிட்டார்.

இந்நிலையில், தனது உடல் ஊனம் காரணமாக கணவரைப் பிரிந்து, வாழ வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த திருமதி முத்துலட்சுமி, தனக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, வாழ்வதற்கு வழி செய்து தர வேண்டி கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

திருமதி முத்துலட்சுமியின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலனை செய்த முதலமைச்சர் ஜெயலலிதா, திருமதி. முத்துலட்சுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, செயற்கைக் கால் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததோடு, தனது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரை தமது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து, “புரட்சி தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்-ன் சார்பில் மின் மோட்டார் பொருத்தப்பட்ட 5 தையல் இயந்திரங்களையும், 25 ஆயிரம் ரூபாயையும் வழங்கி ஆறுதல் கூறினார்.

வாழ்க்கையை இழந்து செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த தன் மீது தாயுள்ளத்தோடு இரக்கம் கொண்டு தனக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ள, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, திருமதி முத்துலட்சுமி கண்ணீர் ததும்ப தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.