காவல்துறையைச் சேர்ந்த 14 பேரின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவு

காவல்துறையைச் சேர்ந்த 14 பேரின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவு

வியாழன் , ஜூன் 30,2016,

சென்னை:உடல்நலக்குறைவால் உயிரிழந்த 14 போலீசார் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

29.12.2015 அன்று விருதுநகர் மாவட்டம், நரிக்குடி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்த கே.ஆவுடையப்பன், 12.3.2016 அன்று திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த கே.சுப்பிரமணியன், 20.3.2016 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த பாபு, 25.3.2016 அன்று சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை 2, புனித தோமையர் மலை, ஆ-நிறுமம், 5-ம் அணியில் இரண்டாம் நிலை காவலராகப் பணி புரிந்த எம்.குமார்,

27.3.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த பி.சந்திரபாலன், தருமபுரி மாவட்டம், தருமபுரி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த பி.வரதராசு, 30.3.2016 அன்று கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த எஸ்.பஞ்சமூர்த்தி, 5.4.2016 அன்று ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த எம்,ஆறுமுகம், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த ஏ.சேகர், 8.4.2016 அன்று ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த ஆர்.ராஜகோபால்,

திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த ஆர்.ரவி, 9.4.2016 அன்று சேலம் மாநகரம், செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த கே.சிவசங்கரன், 12.4.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்த என்.ராஜேந்திரன், 17.4.2016 அன்று திருநெல்வேலி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த எல்.முருகன், ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.