கேரளாவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு – கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி ஆகிய பஞ்சாயத்து வார்டுகளில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, கழக வேட்பாளர்கள் போட்டி

கேரளாவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு – கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி ஆகிய பஞ்சாயத்து வார்டுகளில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, கழக வேட்பாளர்கள் போட்டி

கேரளாவில் இன்று 2-வது கட்டமாக, பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி ஆகிய பஞ்சாயத்து வார்டுகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த, கழக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக இடுக்கி, கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம் ஆகிய 7 மாவட்டங்களில், கடந்த 2-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்தபடி, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் பஞ்சாயத்து 1-வது வார்டில் திருமதி P. உஷா, மூணார் பஞ்சாயத்து 7-வது வார்டில் திரு. M. செல்லத்துரை, மறையூர் பஞ்சாயத்து 3-வது வார்டில் திரு. L. பாலகிருஷ்ணன், பீர்மேடு பஞ்சாயத்து 1-வது வார்டில் திருமதி S. பிரவீணா ஆகியோர் கழக வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, 2-வது கட்டமாக, பாலக்காடு, ஆலப்புழை, திருச்சூர், பதனம்திட்டா, எர்ணகுளம், கோட்டையம், மலப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து 3-வது வார்டில், திருமதி S. ஹெலன் அமலோற்பவமேரி, கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து 7-வது வார்டில், திருமதி J. ஸ்ரீரஞ்சனி, எருத்தேன்பதி பஞ்சாயத்து 7-வது வார்டில் திருமதி. M. சரஸ்வதி, நல்லேப்பிள்ளி பஞ்சாயத்து 16-வது வார்டில் திரு. S. ரவி ஆகியோர் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். பலத்த பாதுகாப்புடன் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச் சாவடிகளில் ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.