கோதையாறு அணை இன்று திறப்பு ; 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

கோதையாறு அணை இன்று திறப்பு ; 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

புதன், செப்டம்பர் 21,2016,

சென்னை : ராதாபுரத்தில் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற கோதையாறு  அணை இன்று முதல் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

  இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்;

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு பாசனத்திற்காக கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம்,  கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள பகுதிகளுக்கு பாசனத்திற்காக இராதாபுரம் கால்வாயில்  இன்று முதல்  தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.