சட்டசபை விவாதத்தில் பங்கேற்க கருணாநிதிக்கு துணிவு இருக்கிறதா? முதலமைச்சர் ஜெயலலிதா கேள்வி

சட்டசபை விவாதத்தில் பங்கேற்க கருணாநிதிக்கு  துணிவு இருக்கிறதா? முதலமைச்சர் ஜெயலலிதா கேள்வி

திங்கள் , ஆகஸ்ட் 22,2016,

திமுக தலைவர் கருணாநிதிக்கு துணிவு இருந்தால் சட்டப்பேரவை விவாதத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திமுக உறுப்பினர்கள் ஒரு வார காலத்துக்கு அவைக்கு வரக் கூடாது என்று இடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுகவினர் நாள் தோறும் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை ஊடகங்கள் வழியாக நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

திமுக ஆட்சியை காட்டிலும் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது.

89  திமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் கட்சித் தலைவரை இடை நீக்கம் செய்யவில்லையே. அவர் வந்திருக்கலாமே? துணிவு இருந்தால் திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வந்திருக்க வேண்டும். பேசியிருக்க வேண்டும்.

வேண்டுமென்றே திமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், சஸ்பெண்ட் செய்யப்படாத திமுகவினர், அவைக்கு வந்தார்களே, அவர்கள் விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே?

2006ல் அதிமுகவினர் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட போது, தனி ஆளாக, நான் மட்டும் அவையில் பங்கேற்று விவாதத்தில் பேசினேன்.

2006 – 11ல் சட்டம் ஒழுங்கு பிரச்னையை போட்டோ ஆல்பமாகக் கொண்டு வந்தேன்.

தமிழக சட்டப்பேரவையில் திமுகவினரின் செயல்பாட்டுக்காக ஸ்டாலின் மன்னிப்புக் கேட்டார்.

ஆட்சி காலத்தில் செய்த தவறுகளுக்காக ஊர் ஊராக, வீடு வீடாக சென்று மன்னிப்புக் கேட்டார். பாட்டுப் பாடினார். ஆனால் அதை எல்லாம் மக்கள் ஏற்கவில்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.