சட்டமன்றத் தேர்தல் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் புதுச்சேரி அ.தி.மு.க.வினர் ஆலோசனை

சட்டமன்றத் தேர்தல் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் புதுச்சேரி அ.தி.மு.க.வினர் ஆலோசனை

வியாழன் , மார்ச் 24,2016,

புதுச்சேரி சட்டமன்றத்தேர்தல் குறித்து புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன், தேர்தல் பிரிவு செயலாளர் கண்ணன் ஆகியோர் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை பெற்றனர்.

இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை நேற்று புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன், எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து, புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் பணிகள் சம்பந்தமாக ஆலோசனை பெற்றனர்.

இந்நிகழ்வின் போது, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும்,வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருமான எடப்பாடி மு.பழனிசாமி, கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான எம்.சி. சம்பத் ஆகியோரும் உடன் இருந்தனர்.