சர்வதேச நீதிமன்றத்தில் கருணாநிதியை நிறுத்த வேண்டும் : நாஞ்சில் சம்பத் ஆவேச பேச்சு

சர்வதேச நீதிமன்றத்தில் கருணாநிதியை நிறுத்த வேண்டும் : நாஞ்சில் சம்பத் ஆவேச பேச்சு

வியாழன் , மார்ச் 24,2016,

திமுக தலைவர் கருணாநிதியை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என அதிமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

வேலூர் மேற்கு மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் நரியம் பட்டு ஊராட்சியில் அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அண்ணா திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் ரஞ்சித்குமார் வரவேற் றார். ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். ஒன்றிய எம்ஜிஆர் அணி இணைச்செயலாளர் வெங்கடேசன், எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் அகமதுபாஷா, ஒன்றிய இணைச்செயலாளர் புனிதா உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அதிமுக பேச்சாளர் நாஞ்சில்சம்பத் பேசியதாவது:

கடந்த தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக அரசின் சாதனைகளால், ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவது உறுதி. தேமுதிக ஓட்டு வங்கி 3 சதவீதமாக குறைந்து விட்டது. திமுக கூட்டணியில் இணையும் கட்சிகள் 2-ஆக உடையும்.

கடந்த காலங்களில் திமுகவுடன் கூட்டணி வைத்த பாமக, இந்திய தேசிய லீக் போன்ற கட்சிகளை 2-ஆக உடைத்து, அதன்மூலம் குளிர் காய்ந்தவர் கருணாநிதி. இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவித் தமிழர்கள் லட்சம் பேரைக் கொன்று குவித்தபோது அதற்கு ஆதரவாக செயல்பட்ட கருணாநிதியை, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட சிறுபான்மை அணிச் செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய ஜெ. பேரவைச் செயலாளர் ரமேஷ், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் கனகதாரா, மாவட்ட இணைச் செயலாளர் சந்திராசேட்டு உட்பட பலர் பங்கேற்றனர்.