சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் முதலீட்டை ஈர்த்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுக்குழுவில் பாராட்டு

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் முதலீட்டை ஈர்த்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுக்குழுவில் பாராட்டு

வெள்ளி, ஜனவரி 01,2016,

சென்னை :தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திய ரூ 2லட்சத்து 42 ஆயிரம் முதலீட்டை ஈர்த்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் மின்சாரம்இன்றி இருளில் மூழ்கிக் கிடந்ததன் காரணமாகவும், காங்கிரஸ்-திமுககூட்டணியில் இயங்கிய மத்திய அரசின் நிலையற்ற வரிக் கொள்கைகாரணமாகவும் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு சர்வதேசமுதலீட்டாளர்களும், உள்நாட்டுத் தொழில் உற்பத்தியாளர்களும்முன்வரவில்லை.மக்களுக்குத் தேவையான மின்சாரத்தையும், தொழிற்சாலைகளுக்குத்தேவையான மின்சாரத்தையும் சீராக வழங்காவிடில் தமிழகம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலமாகிவிடும் என்ற கவலையில் முதல்வர் ஜெயலலிதா , 2011-ஆம்ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், மின்சாரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். இந்த நடவடிக்கைகளால் முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் அதாவது, 1.11.2008 முதல் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள்அனைத்தையும் முதல்வர் ஜெயலலிதா அரசுமுற்றிலுமாக நீக்கி உள்ளது. புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட இருக்கிறது. புதிய ஒப்பந்தங்கள் காரணமாக மின்சாரம் சீராக பெறப்பட்டுவருகிறது. தமிழக மின்துறை காலத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தப்படதேவையான முதலீடு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், ஆணி வேராகவும் விளங்கும்மின்சாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, முதலமைச்சர்ஜெயலலிதா மேற்கொண்ட போர்க்காலநடவடிக்கைகளால் தமிழ் நாட்டில் மின்வெட்டு முற்றிலுமாகநீக்கப்பட்டதோடு, 2011-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில்முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தவாறு,தமிழகம் `மின்மிகை மாநிலம்’ என்ற சிறப்பினைப் பெற்றிருக்கிறது.முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வந்த காரணத்தால் இந்தச் சாதனையைஎட்ட முடிந்தது. தமிழகத்தை இருளில் இருந்து மீட்ட பெருமை முதல்வர் ஜெயலலிதாவையே சாரும் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக முதலமைச்சர் ஜெயலலிதா உயர்த்தியதாலும், தொழில் முனைவோர்க்குமுதலமைச்சர் ஜெயலலிதா அரசு வழங்கி வரும்சலுகைகள் மற்றும் உதவிகள் காரணமாகவும், தமிழ் நாட்டைசர்வதேச முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக மாற்றியமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டஇன்னும் பல நடவடிக்கைகள் காரணமாகவும், உலக முதலீட்டாளர்கள்பலரும் தமிழ் நாட்டின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பி உள்ளனர். இதன்வெளிப்பாடாக, நாடே வியந்து பாராட்டும் வண்ணம் முதலமைச்சர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர்கள்மாநாட்டை” வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலம் 2,42,160/- கோடிரூபாய்க்கான புதிய முதலீட்டிற்கு வழிவகை செய்து, எண்ணற்ற புதியதொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்கப்படுவதற்கும்,லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் வழிவகை செய்துள்ளார்.

மின் உற்பத்தியிலும், தொழில் முதலீட்டை ஈர்ப்பதிலும், சரித்திரம்பேசும் சாதனைகளை மிகக் குறுகிய காலத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கும்முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்தப் பொதுக்குழு மனதாரப் பாராட்டிமகிழ்கிறது. இந்த தீர்மானங்களை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முன்வைத்தார். அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் அனைவரும் இந்த தீர்மானத்தை வழிமொழிந்தனர்.