சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; கிறிஸ்தவ ஐக்கிய பேரவை பாராட்டு

சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; கிறிஸ்தவ ஐக்கிய பேரவை பாராட்டு

வெள்ளி, செப்டம்பர் 23,2016,

முதமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தமிழகத்தில் உள்ள தேவாலயங்கள் பழுதுபார்ப்பு பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டம், உலகில் உள்ள கிறிஸ்துவ நாடுகளில் கூட நிறைவேற்றப்படாத ஒரு முன்னோடித் திட்டம் என கிறிஸ்துவ ஐக்கிய பேரவை தெரிவித்துள்ளது.

கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்த்தல் மற்றும் புணரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள நடப்பு நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி திட்டத்தை அண்மையில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். உலகில் உள்ள கிறிஸ்துவ நாடுகள் எதிலும் இது போன்ற ஒரு திட்டத்தை இதுவரை அறிவிக்கபடாத நிலையில், உலகத்திலேயே முதன்முதலாக தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக முதலமைச்சர் அறிவித்துள்ளது கிறிஸ்துவ மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்துவ ஐக்கிய பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில், இந்த திட்டத்தை அறிவித்த முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி அன்று அருமனையில் நடைபெற்ற கிறிதுஸ்மஸ் திருவிழாவில் பங்கேற்று, தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் செல்லும் புனித யாத்திரை செல்லும் கிறிஸ்வதுவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என அறிவித்து, அதை 2011 – ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றினார்.

தற்போது தமிழகத்தில் அறிவித்துள்ள இந்த புதிய திட்டம், உலக நாடுகளுக்கு எல்லாம் முன்னோடி திட்டமாக உள்ளதாக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கிறிஸ்து மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.