முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத் திட்டம் திடீரென மாற்றம் : சென்னையில் இன்று 16 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம்

முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத் திட்டம் திடீரென மாற்றம் : சென்னையில் இன்று 16 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம்

செவ்வாய், மே 10,2016,

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அவரது பிரசாரப் பயணத் திட்டம் திடீரென மாற்றப்பட்டு, இன்று சென்னையில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் துவங்கும் பிரசாரம், நடேசன் சாலை, ஐஸ்ஹவுஸ், காவல்நிலையம் சந்திப்பு,  திருவல்லிகேணி நெடுஞ்சாலை,  அண்ணாசிலை, வேல்ஸ் தோட்டச்சாலை சாலை, ஈவிகேஎஸ் சம்பத் சாலை, சூளை தபால் நிலையம்,  சூளை நெடுஞ்சாலை, வால்ட்டாக்ஸ் ரோடு சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின்பிரிட்ஜ், சத்தியமூர்த்திநகர், எம்கேபி நகர, சென்ட்ரல் அவின்யூ, டாக்டர் அம்கேத்கர் காலேஜ் ரோடு, ஸ்டெரான்ஸ் ரோடு, ஓட்டேரி பாலம், குன்னுர் மேயின் ரோடு, அயனாவரம், ரெட்டித்தெரு சந்திப்பு, பாடி மேம்பாலம், திருமங்கலம் மெயின் ரோடு, கோயம்பேடு பேருந்து நிலையம், விநாயகபுரம் பிரதான சாலை, எம்எம்டிஏ காலனி, அண்ணா ஆர்ச், நெல்சன் மாணிக்கம் ரோடு, புஷ்பா நகர், வடக்கு உஸ்மான் ரோடு, தி.நகர், தெற்கு உஸ்மான் ரோடு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை, கிண்டி பாலம், அண்ணா சிலை, கத்திப்பாரா மேம்பாலம், மத்திய கைலாஷ், மலர் மருத்துவமனை, திருவிக பாலம், ஆர்.கே. மடம் ரோடு, மயிலை மாங்ககொல்லை, லஸ் கார்னர், ஆழ்வார்பேட்டை சந்திப்பு.

ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, மயிலாப்பூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு.வி.க., நகர், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வேனில் சென்று வாக்கு சேகரிக்க உள்ளார்.