சென்னையில் உள்ள 21 தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் : பட்டியலிட்டு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

சென்னையில் உள்ள 21 தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் : பட்டியலிட்டு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

சென்னையில் உள்ள 21 தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன? என்பதை பட்டியலிட்டு முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கினார்.

சென்னை தீவுத்திடலில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது;

முக்கிய பணிகள்

சென்னையில் உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட முக்கிய பணிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில், காசிமேடு பகுதியில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகம் 92 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் 23 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 556 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை நான் திறந்து வைத்துள்ளேன். அரங்கநாதபுரம் திட்டப் பகுதியில் 480 புதிய குடியிருப்புகள் என்னால் திறந்து வைக்கப்பட்டன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 28–2–2016 அன்று நான் பங்கேற்ற அரசு விழாவில் 180 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், 193 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினேன்.

பெரம்பூர் – கொளத்தூர்

பெரம்பூர் தொகுதியில், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் தார் சாலைகள், சிமெண்டு சாலைகள், பூங்கா, நடைபாதை, விளையாட்டுத் திடல் கட்டிடங்கள், மழைநீர் வடிகால்கள், தெரு மின்விளக்குகள், குடிநீர் திட்டப்பணிகள், கழிவுநீர் ஏற்று நிலையப் பணிகள், பாலங்கள், தானியங்கி நடை மேம்பாலங்கள், துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள், மின் கடத்திகள் அமைத்தல் ஆகிய பணிகள் 280 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன;

கொளத்தூர் தொகுதியில் இதே போன்று 327 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வில்லிவாக்கம் தொகுதியில் 207 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. திரு.வி.க. நகர் தொகுதியில் 161 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எழும்பூர் தொகுதியில் 398 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராயபுரம் தொகுதியில் 209 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துறைமுகம் தொகுதியில் 594 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி

சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் 420 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயிரம் விளக்கு தொகுதியில் 264 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்ணா நகர் தொகுதியில் 563 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விருகம்பாக்கம் தொகுதியில் 393 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சைதாப்பேட்டை தொகுதியில் 272 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தியாகராயநகர் தொகுதியில் 356 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மயிலாப்பூர் தொகுதி

மயிலாப்பூர் தொகுதியில் 279 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேளச்சேரி தொகுதியில் 533 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூர் தொகுதியில் 1,266 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆலந்தூர் தொகுதியில் 1,119 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுரவாயல் தொகுதியில் 319 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாதவரம் தொகுதியில் 821 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருவொற்றியூர் தொகுதியில் 393 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வில்லிவாக்கம், மாதவரம், அண்ணா நகர், திரு.வி.க. நகர், துறைமுகம் மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் கொடுங்கையூர் கால்வாயை மேம்படுத்தும் பணி, கொளத்தூர்–மாதவரம் மாற்றுக் கால்வாய் அமைக்கும் பணி, ஓட்டேரி–நல்லாவில் கால்வாய் அமைக்கும் பணி ஆகியவை 90 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. சேப்பாக்கம் தொகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய பக்கிங்காம் கால்வாய் மேம்படுத்தும் பணி செயல்படுத்தப்பட்டு உள்ளது.

மதுரவாயல் – விருகம்பாக்கம்

மதுரவாயல், விருகம்பாக்கம், அண்ணா நகர் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் விருகம்பாக்கம்–அரும்பாக்கம் வடிகாலில் இருந்து 100 அடி சாலை வழியாக கூவம் ஆறு வரை குறுக்கு வெட்டு மாற்றுக் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் விருகம்பாக்கம், அரும்பாக்கம் வடிகால் மேம்படுத்தும் பணி 74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீராங்கல் ஓடை வடிநீர் கால்வாயை மேம்படுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி ஏரி உபரி நீருக்கு குறுக்கு வழி மாற்று வடிநீர்க் கால்வாய் அமைக்கும் பணி 58 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது.

சோழிங்கநல்லூர் தொகுதி

சோழிங்கநல்லூர் தொகுதியில் தெற்கு பக்கிங்காம் கால்வாயினை அடையாறு தெற்கு அடைப்பு முதல் முட்டுக்காடு வரை மேம்படுத்தும் பணி 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரவாயல் தொகுதியில் போரூர் ஏரியின் உபரி வடிநீர் கால்வாய் மேம்படுத்தும் பணி 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாடிக்குப்பம் பாலம் முதல் வானகரம் வரை உள்ள கூவம் ஆற்றை சீரமைக்கும் பணி 17 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது.

திருவொற்றியூர் தொகுதியில் 3 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் புனரமைக்கப்பட்டுள்ளது. 26 கோடி ரூபாய் செலவில் நேதாஜி நகர் முதல் நெட்டுக்குப்பம் வரை கட்டப்பட்ட கடல் அரிப்பு தடுப்புச் சுவர் 2 மீட்டர் உயர்த்தி புனரமைக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர் – வில்லிவாக்கம்

அம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அம்பத்தூர் ஏரி உபரி நீர் கால்வாய் மேம்படுத்தும் பணி 23 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. வாக்காளப் பெருமக்களே. இவ்வளவு தான் என்று எண்ணிவிடாதீர்கள். இன்னும் ஏராளமான திட்டங்கள் உள்ளன. முடிக்கப்பட்ட பணிகள் உள்ளன. நடைபெற்று வரும் திட்டங்களும் உள்ளன. நான் ஏற்கனவே சட்டமன்றப் பேரவையில் கூறியது போல் இந்த ஐந்தாண்டு கால ஆட்சிக் காலத்தில் நாங்கள் துறை தோறும், துறை தோறும் செயல்படுத்திய திட்டங்களையெல்லாம் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது.

ஒரு பொதுக்கூட்டம் போதாது

இந்த சென்னை மாநகரத்தை மட்டுமே எடுத்துக்கொண்டால், இன்றைக்கு நான் பேசிக்கொண்டிருக்கும் 21 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே எடுத்துக்கொண்டால் கூட, இந்த ஒரு பொதுக்கூட்டத்தில் விவரங்களையெல்லாம் சொல்லி முடிக்க முடியாது.

ஒவ்வொரு தொகுதியைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றாலும் ஒரு வாரம் வேண்டும். அதனால், நேரத்தின் அருமையைக் கருதி இத்துடன் நிறுத்திக்கொண்டிருக்கிறேனே தவிர, இவ்வளவு தான் என்று எண்ணிவிடாதீர்கள். எவ்வளவு செய்திருக்கிறோம் என்ற உண்மை தெரிந்தால் எதிரிகள் மூர்ச்சையடைந்து விழுந்துவிடுவார்கள். நீங்கள் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பீர்கள்.  இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.