சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறப்பு -முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரபல தமிழ் நாளிதழான “தினத்தந்தி” பாராட்டு

சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறப்பு -முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரபல தமிழ் நாளிதழான “தினத்தந்தி” பாராட்டு

23 November 2015

கனமழை காரணமாக, சென்னை நகருக்கு காய்கறிகள் வரத்து குறைந்ததையடுத்து, அவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், சென்னை நகரில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்பட்டு, குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடையே இந்த கடைகளுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ள நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, காய்கறி விலையை கட்டுப்படுத்த மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையை பிரபல தமிழ் நாளிதழ் பாராட்டு தெரிவித்து, தலையங்கம் தீட்டியுள்ளது.

முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, துரைப்பாக்கம், மீனம்பாக்கம், தாடண்டன் நகர், விருகம்பாக்கம், வடபழனி, அம்பத்தூர், கிழக்குத் தாம்பரம், வில்லிவாக்கம், அமைந்தகரை, மயிலாப்பூர், புரசைவாக்கம் உட்பட 50 இடங்களில், T.U.C.S. அங்காடிகள் மற்றும் கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மறுநாளே திறக்கப்பட்டு, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வெங்காயம், தக்காளி, உருளைகிழங்கு, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் காய்கறிகள் கிடைத்து வருவதால், பொதுமக்களிடையேமிகுந்த வரவேற்பு கிடைத்ததுடன், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், பிரபல தமிழ் நாளிதழான “தினத்தந்தி” இன்றைய தலையங்கத்தில், உயர்ந்து வந்த காய்கறி விலையை கட்டுப்படுத்தும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட உடனடி நடவடிக்கையை வரவேற்று பாராட்டியுள்ளது.

கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நீலகிரி, விழுப்புரம், நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு சங்கங்கள் காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது – ஏற்கனவே, சென்னை, கோவை, மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பண்ணை பசுமை கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன – இந்த கடைகளுக்கு பொதுமக்களிடையே பலத்த வரவேற்பு உள்ளது – தற்போது சென்னை நகரில் மழை காரணமாக வரத்து குறைந்ததால், காய்கறிகளை விலை உயர்வை கட்டுப்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உடனடியாக சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை திறந்து, அவற்றின் மூலம் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார் – வெளிச்சந்தை விலையைவிட பாதி அளவு விலையில் இக்கடைகளில் காய்கறிகள் கிடைப்பதால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால், தனியார் காய்கறி கடைகளும் உடனடியாக விலையை குறைத்துவிட்டன என்று அந்த நாளிதழின் தலையங்கத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது – பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் காற்கறிகளை கொடுத்து, அதேநேரத்தில் விலை வாசியையும் கட்டுக்குள் வைக்க உதவியதுடன், விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்க வழிவகை செய்துள்ள இத்திட்டம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கை என்று தினத்தந்தி பாராட்டு தெரிவித்துள்ளது.