சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு விட்டமின் திரவம் வழங்கப்பட்டது

சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு விட்டமின் திரவம் வழங்கப்பட்டது

வியாழன் , மார்ச் 24,2016,

சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு விட்டமின் திரவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு விட்டமின் திரவம் வழங்கும் பணி கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எழும்பூர் சிறுவர் மருத்துவனை, மகப்பேறு மருத்துதவனை, முகப்பேர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு விட்டமின் திரவம் வழங்கும் பணி நடைபெற்றது. குழந்தைகளுக்கு வரும் மாலைக்கண் நோயை தடுக்கவும், உடல் ஆரோக்கியமாகவும், மூளைவளர்ச்சியடைவதற்கும் இந்த திரவம் பயனுள்ளதாக அமைந்திருப்பதால், ஏராளமான குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த பணி வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.