சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

வெள்ளி, மார்ச் 18,2016,

சேலம் தாதகாப்பட்டியில் திமுக பிரமுகர் ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க வெள்ளிக் கொலுசுகள் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பறக்கும் படை அதிகாரி முருகானந்தம், எஸ்ஐ ராஜமாணிக்கம் உள்ளிட்டோரை கொண்ட பறக்கும் படையினர், சேலம் தாதகாப்பட்டி இந்திராநகர் 55-வது வார்டு திமுக துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் (35) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

உதயசூரியன் சின்னத்துடன் திமுக தலைவர் கருணாநிதி, அக் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரது படங்களுடன் தலா ஒரு செட் வெள்ளிக் கொலுசு அடங்கிய 105 பாக்கெட்டுகள் இருந்தது சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் 6 கிலோ எடையுள்ள வெள்ளிக் கொலுசுகளின் மொத்த விலை ரூ.3 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கோபாலகிருஷ்ண னிடம் (35) நடத்திய முதல் கட்ட விசாரணையில், ‘யாரேனும் ஆர்டர் கொடுப்பார்கள் என்ற நம்பிக் கையில் வெள்ளிக் கொலுசுகளை பாக்கெட்டுகளில் தயார் செய்து வைத்துள்ளேன்’ என்றார். பறி முதல் செய்யப்பட்ட வெள்ளிக் கொலுசுகள் சேலம் தெற்கு சட்டப் பேரவை தொகுதி தேர்தல் நடத் தும் அலுவலரும் மாநக ராட்சி ஆணையருமான செல்வ ராஜிடம் ஒப்படைக்கப்பட்டன. கோபாலகிருஷ்ணன் மீது தேர்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.