சேலம் ஒரே மேடையில் 46 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா எழுச்சி பேருரை

சேலம் ஒரே மேடையில் 46 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா எழுச்சி பேருரை

வியாழன் , ஏப்ரல் 21,2016,

 சேலம் , நாமக்கல், கோயம்புத்தூர், மாவட்டங்களை சேர்ந்த 46 அ.தி.மு.க. வேட்பாளர்களை சேலம் மகுடஞ்சாவடி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.  அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் தோழமைக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் அடுத்த மகுடஞ்சாவடியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வரும் அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா பங்கேற்று பேசினார்.

அப்போது சேலம், நாமக்கல் மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 46 அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.  ஏற்காடு தொகுதி வேட்பாளர் கு.சித்ரா ஓமலூர் தொகுதி வேட்பாளர் வெற்றிவேல், சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் வெங்கடாஜலம் சேலம் வடக்கு தொகுதி வேட்பாளர் சரவணன் சேலம்சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளர் . சந்திரசேகரன் நாமக்கல் தொகுதி வேட்பாளர் பாஸ்கர் , பரமத்தி வேலூர் தொகுதி வேட்பாளர் சு.சு. இராஜேந்திரன், திருச்செங்கோடு தொகுதி வேட்பாளர் பொன். சரஸ்வதி, குமாரபாளையம் தொகுதி வேட்பாளர் தங்கமணி இராமலிங்கம், மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் சிவசுப்பிரமணி, பெருந்துறை தொகுதி வேட்பாளர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம், பவானி தொகுதி வேட்பாளர் கருப்பணன், அந்தியூர் தொகுதி வேட்பாளர் ராஜா (எ) ராஜா கிருஷ்ணன், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி

வேட்பாளர் செங்கோட்டையன், பவானிசாகர் தொகுதி வேட்பாளர் ஈஸ்வரன், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதி வேட்பாளர் பொன்னுசாமி, காங்கேயம் தொகுதி வேட்பாளர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர் தனியரசு, உடுமலைப்பேட்டை தொகுதி வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் தொகுதி வேட்பாளர் மனோகரன்,  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர் சின்னராஜ், சூலூர் தொகுதி வேட்பாளர் கனகராஜ், கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் ஆறுக்குட்டி, கோயம்புத்தூர் வடக்கு தொகுதி வேட்பாளர் அருண்குமார், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி, கோயம்புத்தூர் தெற்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன்,

சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்  முத்து, கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர் சண்முகம், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் பொள்ளாச்சி ஏ.ஜெயராமன், வால்பாறை தொகுதி வேட்பாளர் கஸ்தூரி, வாசகுன்னூர் தொகுதி வேட்பாளர் ராமு (எ) சாந்திராமு ஆகியோருக்கு எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை” சின்னத்தில் வாக்களித்து, யும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். மேலும் கேரள மாநில சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களையும் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தி அவர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.