சோலார்பேனல் மோசடி வழக்கு : முன்னாள் தி.மு.க. அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கும் தொடர்பு

சோலார்பேனல் மோசடி வழக்கு : முன்னாள் தி.மு.க. அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கும் தொடர்பு

புதன், ஜூலை 20,2016,
கோவை  – சோலார்பேனல் மோசடி வழக்கில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக சரிதா நாயர் குற்றம் சாட்டி உள்ளார். கோவை வடவள்ளியில் வீடுகளில் சோலார் பேனல் வைத்து தருவதாக கூறி மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கோவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-6) நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று கோவை கோர்ட்டில் நடந்தது.இதில் ஆஜராவதற்காக சரிதா நாயர், மேலாளர் ரவி ஆகியோர் கோவை கோர்ட்டுக்கு வந்தனர்.

அப்போது சரிதா நாயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.,

கேரள அரசு சோலார் பேனல் மோசடி குறித்து விசாரிக்க விசாரணை கமி‌ஷனை அமைத்துள்ளது. இந்த கமி‌ஷன் முன்பு அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். இது அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று நம்புகிறேன். மேலும் சோலார் கமி‌ஷன் கேரள அரசிடம் சில கருத்துகளை பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கிறேன். இதுவரை 13 பேர் மீது மோசடி ஆதாரங்களை அளித்துள்ளேன். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட 9 பேர் மீது ரிஜிட்டல் ஆதாரங்களை அளித்துள்ளேன். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆரியாடு முகமது, அனில்குமார், முன்னாள் நிதித்துறை இணை அமைச்சர் தி.மு.க.வை சேர்ந்த பழனிமாணிக்கம் ஆகியோரும் அடங்குவர். இவ்வாறு அவர் கூறினார். இதைதொடர்ந்து சரிதா நாயர், மேலாளர் ரவி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேலு, அடுத்த மாதம் 19-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.