தமிழகத்திற்கு தரவேண்டிய 45 TMC தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல்

தமிழகத்திற்கு தரவேண்டிய 45 TMC தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல்

புதன், பெப்ரவரி 10,2016,

காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தரவேண்டிய 45 TMC தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு 45 TMC தண்ணீர் தரவேண்டும் என்று கடந்த ஆண்டு காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கிய நிலையில், கர்நாடகா தரமறுத்துவிட்டது. எனவே, முதலமைச்சர்  ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 45 TMC தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். சாதகமான செயல்பாடு இல்லாத நிலையில், முதலமைச்சர்  ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன்மீது இதுவரை உச்சநீதிமன்றம் உத்தரவு ஏதும் பிறப்பிக்காத நிலையில், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தரவேண்டிய 45 TMC தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு இன்று தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.