தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்து சாதனை : தொடர்ந்து மின்சார உற்பத்தி அதிகரிக்கும் என அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்து சாதனை : தொடர்ந்து மின்சார உற்பத்தி அதிகரிக்கும் என அதிகாரிகள் தகவல்

வியாழன் , ஏப்ரல் 21,2016,

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 15 ஆயிரத்து 191 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மின்உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் மோசமான நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் மிகக்கடுமையான மின்வெட்டை சந்தித்து வந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிப்படி, மின்உற்பத்தியை பெருக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இதன் மூலம் தமிழகம் தற்போது மின்மிகை உற்பத்தி மாநிலம் என்ற பெருமையுடன் திகழ்கிறது. இதற்கு சான்றாக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 15,191 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அனல்மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், காற்றாலை, டீசல் மின்சாரம் என பல்வேறு வகையிலும் இந்த உற்பத்தி கிடைத்துள்ளது. கடும் கோடை வெப்பம் நிலவும் இப்போதைய சூழலில், தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் மெகாவாட் தேவைப்படும் நேரத்தில் இந்த மின்உற்பத்தி நடைபெற்றுள்ளது. தேவையைவிட கூடுதலாக மின்சார உற்பத்தி நடைபெற்றுள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மின்சார உற்பத்தியை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளனர்.