தமிழகத்தில் கல்வித்துறை வளர்ச்சிக்காக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ; மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில் அமைச்சர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் கல்வித்துறை வளர்ச்சிக்காக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ; மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில் அமைச்சர்கள் வலியுறுத்தல்

புதன், அக்டோபர் 26,2016,

தமிழகத்தில் கல்வித்துறை வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில்  தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

டெல்லியில், மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் திரு. K.P. அன்பழகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்று, புதிய கல்விக் கொள்கையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருத்துக்களை எடுத்துரைத்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா, கல்வித்துறை வளர்ச்சிக்காக தமிழகத்தில் செயல்படுத்தி வரும் பல்வேறு மகத்தான திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தினர்.