தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்த கருணாநிதி கையாலேயே காங்கிரஸ் தன் முடிவுரையை எழுதிக்கொண்டது:பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கருத்து

திங்கள் , பெப்ரவரி 15,2016,

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்த கருணாநிதி கையாலேயே காங்கிரஸ் தன் முடிவுரையை எழுதிக்கொண்டது என பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கருத்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ;

2-ஜி அலைகற்றை வழக்கில் கடந்த வெள்ளிகிழமையன்று, தன் தரப்பு வாதத்தில் முன் வைத்த ஆ.ராசா அவர்கள், தான் செய்த விஷயங்கள் அனைத்தும், முன்னாள், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கும், இன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களுக்கும் தெரியும் எனச்சொல்லி அவர்களை சாட்சிகளாக அழைக்க வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரசின் மானத்தை “நடுகோர்ட்டுக்கு மட்டுமல்ல நடுரோட்டுக்கும்” கொண்டுவந்த திமுக “நம்பகத்தன்மை கொண்ட பங்காளியாம்”

2011ம் ஆண்டு திமுக -காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தைகள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் இதே 2-ஜி மற்றும் ஏர்செல்-மேக்சி வழக்கு விஷயமாக அதே கட்டடத்திற்குள் இருந்த கலைஞர் டி.வி. நிறுவனம் சி.பி.ஐ.யால் சோதனை செய்யப்பட்டது.

‘நம்பிக்கைக்குரிய பங்காளிகள்” எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.

2004 ஐ.மு.கூ. அரசில் முக்கிய இலாகாகள் வேண்டும் என்பதற்காக, அரசுக்கு தரவேண்டிய ஆதரவு கடிதத்தை கலைஞர் அவர்கள் எப்படி எல்லாம் இழுத்தடித்தார் என்பதை காங்கிரஸ் மறந்திருக்க முடியாது. தன் மருமகன், தயாநிதி மாறன், முதன்முறை எம்.பி.ஆக இருந்தாலும், அவருக்கு கேபினட் மந்திரி வழங்க வேண்டும், அதுவும் அவர் செய்யும் தொழில் சம்பந்தமான இலாகாவே தரவேண்டும், என்பதற்காக காங்கிரசுக்கு திமுக கொடுத்த ‘நெருக்குதல்’ எவ்வளவு என்பதை, இன்னும் அந்த “வடு” மறையாமல் இருக்கும், காங்கிரஸ் மறந்திருக்க முடியாது.

அதுவும் 1967ல் இருந்து தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்த கருணாநிதி கையாலேயே காங்கிரஸ் தன் முடிவுரையை எழுதிக்கொண்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் திமுக- காங்கிரஸ் கூட்டணியை வெளுத்து வாங்கி இருக்கிறார் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.