தமிழகத்தில் சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளை திணிக்க அனுமதிக்க மாட்டோம், சிறுபான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்படும் ; சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி. அன்பழகன் உறுதி

தமிழகத்தில் சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளை திணிக்க அனுமதிக்க மாட்டோம், சிறுபான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்படும் ; சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி. அன்பழகன் உறுதி

புதன், ஆகஸ்ட் 10,2016,
சட்டப்பேரவையில் நேற்று  உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தின்போது, பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து, தெரிவிக்கும் என்றும், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளை தமிழ்நாட்டில் திணிக்க எந்த வாய்ப்பும் அளிக்கப்படமாட்டாது என்றும் சிறுபான்மையினர் நலன் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, இதே கருத்தை உறுதிப்படுத்திய அமைச்சர் பெஞ்சமின், முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி, 221 புதிய தொடக்க பள்ளிகளை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.