தமிழகத்தில் முதன்முறையாக தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு ; போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு

தமிழகத்தில் முதன்முறையாக தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு ; போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 30,2016,

தமிழகத்தில் முதன்முறையாக தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தில் அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் திருச்சி, மதுரை, சேலம், ஆகிய இடங்களில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என தெரிவித்தார். அரசு போக்குவரத்து கழகங்களின் நெடுந்தூரப் பேருந்துகளுக்கு மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறிய அவர், பயணிகளின் வசதிக்காக பேருந்து ஒன்றுக்கு 4 இருக்கைகளுடன் தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.