தமிழகம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பள்ளி மாணவர்கள் 2 பேர் முதலிடம்

தமிழகம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பள்ளி மாணவர்கள் 2 பேர் முதலிடம்

செவ்வாய், மே 17,2016,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டு தமிழகத்தில் 91.4 சதவீதமும், புதுச்சேரியில் 87.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்:

முதலிடம் – 2 பேர்

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி ஸ்ரீ வித்தியாமந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த வி.ஆர்த்தி, கே.எச் ஜஸ்வந்த் ஆகிய இரண்டு மாணவர்கள் 1195 மதிப்பெண் எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளனர்.

தெற்கு சென்னையில் குட்ஷப்பர்ட் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த சத்ரியா கவின் பிறமொழிப்பாடமாக பிரெஞ்சு எடுத்து 1195 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

இரண்டாம் இடம் – 2 பேர்

திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீ நிக்கேதன் மெட்ரிக் பள்ளியில் ஏ.ஜிபவித்ரா 1194 மதிப்பெண்கள் பெற்று பவித்ரா, குட்ஷெப்பர்டு மெட்ரிக் பள்ளியில் பிரெஞ்சு பாடமாக கொண்டு எஸ்.ஸ்ருதி ஆகிய இரண்டு பேர் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மூன்றாம் இடம் – 4 பேர்

கோயம்பத்தூர் மாவட்டத்தில் விமலா ஜோதி கன்வென்ட் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த கே.ஷம்ரிதா பிரென்சு முதல் பாடமாகவும்,

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாராதி வித்யா பவன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஜி.நவீன் சமஸ்கிருதம் முதல் பாடமாகவும்,

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கே.வி பள்ளியைச் சேர்ந்த வி.எஸ் வேணுப்ரித்தா தமிழை முதல் பாடமாகவும்,

காஞ்சிபுரம், நியூ பிரின்ஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த என்.நிவேதிதா சமஸ்கிருத முதல் பாடமாகவும், என நான்கு பேர் 1193 மதிப்பெண்களை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.