தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழக்கிழமை , அக்டோபர் 20, 2016,

சென்னை : தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில், 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். புதுச்சேரியில் அ.தி.மு.க. சார்பில் ஓம் சக்தி சேகர் போட்டியிடுகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள 3 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்வரும், அ .தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று  அறிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதிக்கு வி. செந்தில் பாலாஜி, தஞ்சாவூர் தொகுதிக்கு எம்.ரங்கசாமி, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஏ.கே. போஸ், புதுச்சேரி நெல்லிதோப்பு தொகுதிக்கு ஓம்சக்தி சேகர் ஆகியோரை அ தி.மு.க. வேட்பாளர்களாக முதல்வர் ஜெயலலிதா நேற்று  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 19.11.2016 அன்று நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலிலும், திருப்பரங்குன்றம், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில் பாலாஜியும், தஞ்சை தொகுதியில் எம்.ரெங்கசாமியும் (தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்), திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போசும் (முன்னாள் எம்.எல்.ஏ.), புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் ஓம்சக்தி சேகரும் (முன்னாள் எம்.எல்.ஏ.,) நிறுத்தப்படுகின்றனர்.

இந்த அறிவிப்பு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் ஒப்புதலோடு வெளியிடப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.