தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்:முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்:முதல்வர்  ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

ஞாயிறு, பெப்ரவரி 14,2016,

தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வனத்துறை மற்றும் ஊரக வளர்சித் துறை சார்பில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில், கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆல மரக்கன்றினை நட்டு, திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், ‘தோப்பு’ வெங்கடாச்சலம், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் தமிழகம் முழுவதும் சாலை, பள்ளி வளாகங்கள் மற்றும் சாலையோரம் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெருநகரக் காவல் துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் முதல்வர் மரம் கன்று நடும் இடத்தை அதிகாரிகள் வியாழக்கிழமை தேர்வு செய்தனர். இந்தப் பகுதியை உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வவர்மா, டி.ஜி.பி. அசோக்குமார், காவல் ஆணையர் தே.க.ராஜேந்திரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆனந்தன், தோப்பு வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் அசோக்குமார், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, முதன்மை தலைமை வன பாதுகாவலர் கிருஷ்ணகுமார், சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.