தமிழக அமைச்சரவையில் முதல் மாற்றம் : அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் முதல் மாற்றம் : அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 24, 2017,

சென்னை : 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூடுதலாக கவனித்து வந்த நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆகிய துறைகள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளன. இதையடுத்து ஜெயக்குமார் நிதி அமைச்சராகியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் மறைவுக்குப் பின், முதல்வ ராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். தான் கவனித்து வந்த நிதித்துறையுடன், ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை, பொதுத்துறைகளையும் தன் வசமே வைத்திருந்தார். அப்போது அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி வசம், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகள் இருந்தன.

இந்நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராகி யுள்ளார். அவர் பதவியேற்கும் போது உள்துறை, பொதுத்துறை, நிதித்துறை, பொதுப்பணி, நெடுஞ் சாலை என பல்வேறு துறைகளை தன் வசம் வைத்திருந்தார். தமிழக அரசின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதால், தற்போது நிதி உள்ளிட்ட துறைகள் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஆளுநரின் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் தன்னிடம் இருந்த நிதி, திட்டமிடல், சட்டப்பேரவை, தேர்தல் மற்றும் பாஸ்போர்ட், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆகிய துறைகளை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு வழங்க பரிந்துரைத்தார். இதை ஏற்ற ஆளுநர், ஜெயக்குமாருக்கு நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைகளை ஒதுக்கியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெயக்குமாருக்கு இந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து, தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசம் பொது,உள்துறை, பொதுப்பணி, நீர்ப்பாசனம், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை, கடந்த 16-ம் தேதி பதவியேற்றது. அதன்பிறகு அமைச்சரவையில் நடந்துள்ள முதல் மாற்றம் இதுவாகும்.