தமிழக மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்த பிரேமலதாவிற்கு பொதுமக்கள் கடும் கண்டனம்

தமிழக மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்த பிரேமலதாவிற்கு பொதுமக்கள் கடும் கண்டனம்

புதன், மார்ச் 30,2016,

தே.மு.தி.க. விஜயகாந்த், பொதுக்கூட்டங்களில் முன்னுக்குப் பின் முரணாகவும், குழப்பமாகவும் பேசி, கேலிக்கூத்துகளை அரங்கேற்றி வரும் நிலையில், அவரது மனைவி பிரேமலதா, தேர்தல் விதிமுறைகளை மீறி, அரசியல் கட்சித் தலைவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். இதன் உச்சக்கட்டமாக, தமிழகத்தில் பத்து ஆண்டு காலம் ஆட்சி நடத்தி, மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை பற்றியே பிரேமலதா விமர்சனம் செய்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் நேற்று முன் தினம் நடைபெற்ற தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொது கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மகளிர் அணித் தலைவியும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-க்கு பேசவே தெரியாது, அவர் பேசுறதும் புரியாது என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

திருச்சி மற்றும் சேலத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் தெரிவித்த கருத்துகளில், எம்.ஜி.ஆரை ஒப்பிடுவதற்கு, விஜயகாந்த்துக்கு எந்த தகுதியில்லை என்று தெரிவித்தனர்.

மேலும், குண்டு காயம் காரணமாக பேச்சில் எம்.ஜி.ஆருக்கு தடுமாற்றம் இருந்ததாகவும், உளரும் விஜயகாந்த்தை அவரோடு எப்படி ஒப்பிடுவது என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் கண்ணியமற்ற இந்த பேச்சுக்குபல்வேறு தரப்பு மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.