தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக P.K. வைரமுத்து பொறுப்பேற்பு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக P.K. வைரமுத்து பொறுப்பேற்பு

சனி, ஜூன் 04,2016,

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட திரு.P.K. வைரமுத்து நேற்று  பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.P.K. வைரமுத்து நியமிக்கப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், வீட்டு வசதிவாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.