தியாகிகளையும், அவர்களது தியாகங்களையும் மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான்:குமரி மாவட்ட வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தளவாய் சுந்தரம் பேச்சு

தியாகிகளையும், அவர்களது தியாகங்களையும் மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான்:குமரி மாவட்ட வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தளவாய் சுந்தரம் பேச்சு

புதன்கிழமை , ஜனவரி 27, 2016,

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராவது உறுதி என்று தளவாய் சுந்தரம் கூறினார்.

குமரி மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் டி.மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பார்த்தசாரதி வரவேற்று பேசினார். நகர செயலாளர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ், தொகுதி செயலாளர் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ.,அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், தலைமைக்கழக பேச்சாளர்கள் கோபி காளிதாஸ், தூத்துக்குடி கருணாநிதி, தீக்கனல் லெட்சுமணன் ஆகியோர் உரையாற்றினார்கள். அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தியாகிகளையும், அவர்களது தியாகங்களையும் மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க. குமரி மாவட்டத்தின் தியாகிகளை போற்றும் வகையில் களியக்காவிளையில் தியாகி சிதம்பரநாதனுக்கும், சுசீந்திரத்தில் கவிமணிக்கும் சிலைகளை அமைத்தவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. ஆனால் உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் தலைவர்கள் சிலைகளை வைக்கக்கூடாது என்று தடை உத்தரவு போட்டுள்ளது. அது தெரியாமல் சிலைகளை உடனே திறக்க வேண்டும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 2 முறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். அவரால் குமரி மாவட்ட தியாகிகளுக்கு சிலை அமைக்க முடிந்ததா?.

அ.தி.மு.க. அரசு ஒரு கோடியே 85 லட்சம் பேருக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கியிருக்கிறது. 1 கோடியே 96 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கியிருக்கிறது. அ.தி.மு.க. அரசுக்கு நிகரான அரசு எந்த அரசும் இருக்க முடியாது.

வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா மீண்டும் வருவது உறுதி.இவ்வாறு தளவாய் சுந்தரம் பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் சிவகுற்றாலம், ராஜன், டாரதி சாம்சன், சேவியர் மனோகரன், சிவசெல்வராஜன், எஸ்.ஏ. அசோகன், ஜெயச்சந்திரன், ஜெயசீலன், காரவிளை செல்வன், கே.சி.யூ. மணி, கிருஷ்ணதாஸ், ஜெங்கின்ஸ், ஜெயசுதர்சன், ஜீன்ஸ், எஸ்.கிருஷ்ணகுமார், சலாம், சத்தியாதேவி, பி.சி.என்.திலக்குமார், டாக்டர் மாதேசன், வக்கீல்கள் ஞானசேகர், கனகராஜ், என்ஜினீயர் லெட்சுமணன், இ.என்.சங்கர், தென்கரை மகராஜன், வெங்கடேஷ், இரணியல் லெட்சுமணன், சதானந்தன், பூங்கா கண்ணன், கே.பி.எஸ்.பிரான்சிஸ், ஜான்சிலின் விஜிலா, அக்ஷயா கண்ணன், ரபீக், கலைவாணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.