திருச்செந்தூரில் பாதாள சாக்கடையுடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தினை செயல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பக்தர்கள் நன்றி

திருச்செந்தூரில் பாதாள சாக்கடையுடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தினை செயல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பக்தர்கள் நன்றி

புதன், மார்ச் 23,2016,

திருச்செந்தூரில் சுகாதாரத்தை பேணும் வகையில் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடையுடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தினை செயல்படுத்திய முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு பக்தர்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.

முருக கடவுளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனையடுத்து பக்தர்களின் வசதிக்காக, 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடையுடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டார். திருச்செந்துாரின் அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டதுடன் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து திருச்செந்தூரில் தற்போது கழிவு நீர் தேங்காமலும் துர்நாற்றம் இன்றியும் சுகாதார நகரமாக திகழ்ந்து வருகிறது. இதனால் கோவிலுக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருச்செந்தூர் நகர பொதுமக்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.