திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தின்போது,வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா

திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தின்போது,வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா

திங்கள் , நவம்பர் 07,2016,

திருப்பரங்குன்றம் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், டெபாசிட்டை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தி.மு.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பது, பொதுமக்களிடையே, பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. ஏ.கே. போஸ் போட்டியிடுகிறார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, கழக வேட்பாளரும், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சரின் சாதனைகளுக்காக, கழக வேட்பாளருக்கு பொதுமக்கள் அளித்து வரும் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கழக வேட்பாளர் செல்லும் இடமெல்லாம் மக்கள், அ.இ.அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால், அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், டெபாசிட்டை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தி.மு.க. வேட்பாளர் சரவணன், நிலையூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அந்த பகுதியில் பெண்களுக்கு தி.மு.க.வினர் பணம் விநியோகித்தது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்காக்கும் இருதய அறுவைசிகிச்சைக்கு, காலாவதியான உபகரணங்களை பயன்படுத்தியது தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் சரவணன் மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது, இந்த வழக்கில் இவர் நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.