திருவண்ணாமலை கோயில் குளத்தில் மூழ்கி இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திருவண்ணாமலை கோயில் குளத்தில் மூழ்கி இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம்  நிதியுதவி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், பெப்ரவரி 09,2016,

தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது, திருவண்ணாமலை கோயில் குளத்தில் மூழ்கி இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவண்ணாமலை   நகரம்,   அருள்மிகு   அருணாசலேஸ்வரர்  திருக்கோயில் அருகிலுள்ள  அய்யங்குளத்தில் 8.2.2016 அன்று நடைபெற்ற தீர்த்தவாரி  நிகழ்ச்சியின்போது    திருவண்ணாமலை  நகரத்தைச் சேர்ந்த ராஜா மகன் புண்ணியக்கோட்டி,  சீனுவாசன் மகன் வெங்கட்ராமன், சுப்பிரமணியன் மகன் மணிகண்டன்,  விழுப்புரம் மாவட்டம்,  கள்ளக்குறிச்சி வட்டம்,   நீலமங்கலம் பகுதியைச்  சேர்ந்த சீனுவாசன் என்பவரின் மகன் சிவா ஆகியோர் நீரில் மூழ்கி  உயிரிழந்தனர்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த  இரங்கலையும்,  அனுதாபத்தையும்  தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களின்  குடும்பங்களுக்கு  முதலமைச்சரின்  பொது  நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.